சிறுநீரக நோயை எப்படி தடுக்கலாம்?

Loading...

சிறுநீரக நோயை எப்படி தடுக்கலாம்சிறுநீரக நோயை பொறுத்தவரை நெடு நாளைய சீறுநீரக நோய், இறுதி நிலை சிறுநீரக நோய் என இரண்டாக வகைப்படுத்தலாம். முதலில் சிறுநீரக செயலாமை என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

நம்முடைய சிறுநீரிலிருந்து ஆல்பமின் எனப்படும் புரதம் அதிகளவில் வெளியாவதும் மூன்று மாதத்திற்கும் மேலாக சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறைவாக செயல்படுவதும் தான் சிறுநீரக செயலாமை என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இது எதனால் ஏற்படுகிறது? என்றால் 40 முதல் 50 சதவீதம் நீரிழிவு நோயாலும் 20 முதல் 30 சதவீதம் உயர்ரத்த அழுத்தத்தாலும் ஏற்படுகிறது. மேலும் நெப்ரைடீஸ் என்ற சிறுநீரக வீக்கத்தாலும், சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுக்களாலும் சிறுநீரக கற்கள் போன்றவற்றாலும் பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் என்ற மரபு வழியாக வரும் சிறுநீரக பாதிப்புகளாலும் இந்த நெடு நாளைய சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

தற்பொது உடற்பருமன் காரணமாகவும் இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறு உண்டு என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நோய் நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் காலை நேரத்தில் அதாவது தூங்கி எழுந்தவுடன் முகத்திலும் கண் இமைகளைச் சுற்றிலும் வீக்கம் காணப்பட்டாலோ கால்களில் வீக்கம் காணப்பட்டாலோ அல்லது சிறுநீருடன் ரத்தமும் இணைந்து வெளியேறினாலோ சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வோ அல்லது தடங்கல் ஏற்பட்டாலோ நமக்கும் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

அத்துடன் விலா பகுதியில் சிலருக்கு வலி உண்டாகும். உயர் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்குவதற்கான சாத்திய கூறு அதிகம்.

பல தருணங்களில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு சிறுநீரகமே காரணமாகிறது. எனவே உயர் ரத்த கொதிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களுடைய சிறுநீரக செயல்பாட்டினை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

இதனை எப்படி கண்டறிவது என்றால், மிக எளிமையான சோதனை மூலம் கண்டறியலாம். நமது சிறுநீரை சோதித்து அதில் இருக்கும் ஆல்புமின் என்ற புரதத்தின் அளவையும் கிரியாட்டினின் என்ற சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனையும் கொண்டு கணக்கிடலாம்.

இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாவிட்டால் நம்முடைய உடலின் முக்கிய பாகமான இதயத்தை பாதித்துவிடும். இந்த நோயை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறியாதவர்கள் தான் இறுதி நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகிறார்கள். இறுதி நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகிறவர்களுக்கு டொயாலிஸிஸ் மற்றும் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டின் மூலமே சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு சிகிச்சைகளுக்கும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிக தொகை செலவாகிறது. இந்த இறுதி நிலை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வாரம் மூன்று முறை டொயாலிஸிஸ் செய்ய வேண்டும்.

அத்துடன் எரித்ரோபாய்டின் போன்ற விலையுர்ந்த மருந்தினை ஊசி மூலம் போட்டுக் கொள்ள வேண்டும். அவசியம் ஏற்படின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply