சிறுநீரகத்தில் கல் உருவாகியிருப்பதை அறிந்துகொள்வது எப்படி?

Loading...

சிறுநீரகத்தில் கல் உருவாகியிருப்பதை அறிந்துகொள்வது எப்படிஉடல் தொழிற்சாலையில் கழிவுப் பொருளகற்றும் பகுதியாகச் செயல்படுவது சிறுநீரகம். ஆண், பெண் இருபாலரிலும் சிறு நீரக பாதிப்புகள் அதிகம் ஏற்படுவது ஆண் களுக்குத்தான்.

சிறுநீரகம் தன் வேலையைச் சரியாகச் செய்வதற்கு உடலுக்குள் செல்லும் உணவுப் பொருட்களின் பங்கு மிக முக்கிய மானது. அதுபோல், உடலுக்கு கெடுதி விளைவிக்கும் பழக்க வழங்கங்களும் சிறுநீரக செயல்பாட்டை அதிகம் பாதிக்கின்றன.

ஆண்கள் நாற்பது வயதைத் தாண்டும் போது, சிறுநீரகப் பாதையில் கல் அடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு போன்றவை ஏற் பட்டு வாழ்வின் மீது பயம் கொள்ளச் செய் கின்றன.

நம் உடலிலிருந்து நச்சுகளை அகற்றும் சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள் ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள்.

இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (Crystals), திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன.

சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான கார ணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது

பாரா தைரொய்ட் மிகும் நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரக நோய்கள் போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண் டும்போது இந்த நோய் வருகிறது.

ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்தப் பாதிப்பு இருந் தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க் குழாயில் நுழைந்து வெளி யேற முடியாமல் தடைப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளி யேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்க ளில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளி யேறிவிடும்.

தண்­ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண் டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகிய வற்றின் மூலம் அறியலாம். சிறுநீரகக் கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களை ஆராய்ந்து அதில் கல்சியம், பொஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம்.

இவற்றைக் கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply