சிறுகீரை பாசிப்பருப்பு கூட்டு

Loading...

சிறுகீரை பாசிப்பருப்பு கூட்டுசிறுகீரை மருத்துவ குணம் கொண்டது. இந்தக் கீரையினால் உடலுக்கு அழகு கிடைக்கும். இது காசநோய், பித்த நோய், கண்நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகளை குணப்படுத்தும். மேலும் இக்கீரை வாத நோயை நீக்கக் கூடியது என்பார்கள். அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது. இந்த கீரையை பொரியலாகவோ, பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
தேவையானப் பொருட்கள்:
சிறுகீரை – ஒரு கட்டு
பாசிப்பருப்பு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
சீரகம் – 2 டீ ஸ்பூன்
பூண்டு – 2 பல்
தக்காளி – 1
வரமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
முதலில் சிறுகீரையை நன்றாக பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீர் விட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து பின்னர் பாசிப்பருப்பை போட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்த உடன் அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். பின்னர் சிறுகீரையை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். கீரை அரைபதம் வெந்த உடன் தக்காளியை சேர்த்து வேகவிடவும். இத்துடன் உப்பு சேர்க்கவும். தண்ணீர் குறைவாக இருந்தால் போதுமானது. கீரையும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்த உடன் கடுகு, உளுந்து, சின்னவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். கீரை கூட்டு தயார்.
பாசிப்பருப்பு கீரைக்கூட்டு சுவையோடு, சத்தும் நிறைந்தது. சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சைடு டிஷ்ஷாக பயன்படுத்தலாம். இல்லையெனில் நன்றாக மசித்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply