சிரித்தால் ரத்த அழுத்தம் குறையும்!

Loading...

சிரித்தால் ரத்த அழுத்தம் குறையும்!சிரிப்பு ஒரு மாமருந்து என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியை கேட்டிருப்போமே தவிர அதனை அனுபவித்திருக்கமாட்டோம்.

வாய்விட்டு சிரித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்(Immunoglobulin) என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது.

அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.

கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும் நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது. அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும்.

உடம்பில் நோயெதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது.

ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.

மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.

நீங்கள் சிரித்தால் இதயம் படபடப்பு குறைந்து உங்கள் உடலுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும், மேலும் அதிகமாக சிரிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய் குறைவதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்,

வேலைத்திறனை அதிகரிக்கும், நம்மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் இளமையாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் மீது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply