சிக்கன் மஞ்சூரியன்

Loading...

சிக்கன் மஞ்சூரியன்சிக்கன் – 500 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன் ஃப்ளார் – 6 தேக்கரண்டி
மைதா – 2 தேக்கரண்டி
65 மசாலா – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் – 4 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு – சிறிது
குடைமிளகாய் – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
கொத்தமல்லித் தழை – சிறிது
எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை, 65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.

பொன்னிறமாகப் பொரிந்ததும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் குடைமிளகாய் இரண்டையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் சாஸ் வகைகள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.

சாஸ் வகைகள் ஒன்றாகச் சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.

கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply