சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்

Loading...

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்எல்லா காலகட்டங்களிலும் எளிதாக கிடைக்ககூடிய அதிக சத்துக்கள் நிறைந்த பழம் தான் சாத்துக்குடி.
வைட்டமின் சி அதிகமுள்ள சாத்துக்குடி ஆரஞ்சு வகையை சார்ந்தது.

சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

குறைவான எரிசக்தி கொண்டதால் உடல் எடை கூடுவதை தடுப்பதுடன், உடலுக்கு பலத்தை தருகிறது.

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது.

மேலும் ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து.

எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.

சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

பசியில்லாம் அவதியுறும் நபர்கள், சாத்துக்குடி சாற்றை குடித்தால் சீரண சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply