சர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்

Loading...

சர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் பிரகாரம் பெறுமதியின் அடிப்படையில் கூகுள் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நூறு நிறுவனங்களின் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 158.84 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக பெறுமதியை கூகுள் கொண்டுள்ளதுடன் 147.88 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை கொண்டு அப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 107.54 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியையும் மைக்ரசொப்ட் நிறுவனம் 90.19 அமெரிக்க டொலர் பெறுமதியையும் கொண்டு மூன்றாம் நான்காம் இடங்களை பெற்றுள்ளன. இதேவேளை மெக்டொனல்ஸ் நிறுவனம் 85.71 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஐந்தாம் இடத்திலம் கொக்கா கோலா நிறுவனம் 80.68 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஆறாம் இடத்திலும் உள்ளன. ஒரு நிறுவனம் பெறுகின்ற வருடாந்த வருமானம், வாடிக்கையாளர்களிடம் உள்ள நன்மதிப்பு, புத்தாக்கம் ஆகியவற்றை கொண்டு வர்த்தக பெறுமதி மதிப்பிடப்படுகிறது. கூகுள் நிறுவனம் முதலிடத்தைப் பெறுவதற்கு அது புதிதாக அறிமுகப்படுத்திய கூகுள் கிளாஸ் தொழில்நுட்பம் பெரும் பங்கினை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply