சர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்!

Loading...

சர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்!தற்போது உள்ள நவீன சமூகத்தில் அனைவருக்கும் அதிகமாக வரக்கூடியதாக சர்க்கரை நோய் இருக்கிறது.
பொதுவாக பலரும் இது மரபு ரீதியாக வரும் என்று நினைப்பர். ஆனால் ஆரோக்கியமற்ற முறையில் உணவுகளை எடுத்துக் கொள்வதால் தான் அதிகம் வருகிறது.

இதற்கு பல வழிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தாலும், ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் இதன் தாக்கம் அதிகரிக்கவே செய்யும்.

இனிப்பூட்டப்பட்ட பானங்கள்

இனிப்பூட்டப்பட்ட பானங்களை பொதுவாக அனைவரும் விரும்பி அருந்துவர். இதில் கலோரியும், சர்க்கரையும் அதிக அளவில் இருக்கும். அதனால் இது போன்ற பானங்களை குடிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.

தாமதமாக உணவு உண்ணுதல்

தாமதமாக உணவு உண்ணும் பழக்கம் இருக்கிறது என்றால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஏனெனில் தாமதமாக உணவு உண்ணுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பாதிக்கப்படும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

நார்ச்சத்து குறைந்த உணவு

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது செரிமான மண்டல் பாதிக்கப்படும். இது சர்க்கரை நோய் இடர்பாட்டை அதிகரிக்கும்.

இரவு நேரங்களில் நொறுக்குத்தீனி

தூங்க வேண்டிய நேரத்தில் பலருக்கும் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதுவும் சர்க்கரை நோயை ஏற்படுத்து மோசமான பழக்கம் ஆகும்.

மன அழுத்தம்

மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை பாதிக்கக்கூடியது.

அதனால் மரபு ரீதியாக சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தத்தை பராமரிப்பது உங்களுக்கு மிகவும் முக்கியமாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply