சர்க்கரையை கட்டுப்படுத்தும் நவீன இன்சுலீன் பம்ப்

Loading...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் நவீன இன்சுலீன் பம்ப்இன்­றைய திக­தியில் எம்­மு­டைய இளைய தலை­மு­றை­யினர் பொரு­ளா­தார நிலையில் தன்­னி­றைவும், முன்­னேற்­றமும் அடைந்­து­வி­டு­கி­றார்கள்/ ஆனால் ஆரோக்­கி­யத்தில் முழு கவ­னமோ அல்­லது அதி­க­ள­வி­லான அக்­க­றையோ எடுத்­துக்­கொள்­வ­தில்லை.

எம்­மு­டைய உடல் நலம் என்­பது மருத்­து­வர்­க­ளாலும், தாதியர் களாலும் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­யது இல்லை. அது எம்மால் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­யது என்­பதை முழு­மை­யாக உணர்­வ­தில்லை. அதிலும் சர்க்­க­ரை­யினைப் பற்­றியோ அதன் அள­வைப்­பற்­றியோ தீவி­ர­மாக கரு­துவ தில்லை. அதன் விளைவு பதின் வய­தி­லேயே சர்க்­கரை நோய்க்கு ஆளாகி பெரும் அவதிக் குள்­ளா­கி­றார்கள்.

சர்க்­க­ரையை நாம் மதித்தால் அது எம்மை மதிக்கும். அதனை நாம் துச்­ச­மாக கரு­தினால் அது எம்மை துச்­ச­மாக கருதும். எனவே சர்க்­க­ரையின் விட­யத்தில் அதிக கவ­னத்­துடன் இருக்­க­வேண்டும்.

அத்­துடன் எம்­மு­டைய உடலின் ஆரோக்­கி­யத்தை பேண ஒரு திட­மான திட்டம் தேவைப் படு கிறது. அதனை முறை­யாகக் கடை­பிடித் தால் சர்க்­க­ரை­யி­லி­ருந்து எம்மைக் காத்துக் கொள்­ளலாம் என்ற எச்சரிக்­கை­யுடன் எம்­முடன் பேசத் தொடங்­கு­கிறார் சென்னை யில் இயங்கி வரும் மெட்வே மெடிக்கல் சென்­டரின் நிர்­வாக இயக்­கு­நரும், சர்க் கரை நோய் நிபு­ண­ரு­மான டொக்டர் டி. பழனி யப்பன்.

மெட்­ட­பாலிக் கம் வாஸ்­குலர் டீஸிஸ் என்­ற­ழைக்­கப்­படும் சர்க்­கரை நோயால் பார்­வை­யி­ழப்பு, மார­டைப்பு, காலி ழப்பு, ஆண்மை குறைவு போன்ற இழப்­புகள் உண்டு என்­கி­றார்­களே உண் மையா?

உணவு பழக்க வழக்­கங்கள், முறை­யான உடற்­ப­யிற்சி, நேரந்­த­வ­றாமல் சாப்­பி­டு­வது, விரும்பும் சூழலில் பணி யாற்­று­வது என்ற வாழ்க்கை முறையை கடை பிடிக்­கா­த­வர்கள் அனை­வரும் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­ப­டக்­கூடும்.

வயதின் கார­ண­மா­கவோ அல்­லது முது­மையின் கார­ண­மா­கவோ கூட சர்க்­கரை வரலாம். எளிதில் எந்­த­வித அறி குறி­யையும் சர்க்­கரை குறை­பாடு வெளிப்­படுத் தாததால் இதனை கண்­ட­றிந்­த­வு­டன இதற்கான முக்­கி­யத்­து­வத்தை நீங்கள் அளிக்­க­வேண்டும்.

முறை­யான பரி­சோ­த­னை­களை மேற் கொண்டு, மருத்­து­வர்­களின் ஆலோச னைப்­படி செயல்­பட்டு சர்க்­க­ரையை கட் டுக்குள் வைத்­தி­ருக்­கா­விட்டால் நீங்கள் குறிப்­பிட்ட அனைத்து இழப்­பு­க­ளையும் சந்­திக்­க­வேண்­டி­ய­தி­ருக்கும். இதில் எந்த மாறு பாடும் இல்லை.

நீரி­ழி­விற்­காக நாம் எடுத்­துக்­கொள்ளும் மாத்­தி­ரைகள் பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்து பவை என்றும், இதனால் சிறு­நீ­ரக பாதிப்­புகள் உரு­வா­கின்­றன என்றும் ஒரு சாரார் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்­களே இதன் உண்­மை­யான மருத்­துவ பின்­னணி என்ன?

நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­வதன் அறி­கு­றி­யாக கூட சிறு­நீ­ர­கங்கள் பாதிக்­கப்­ப­டலாம். சிறு­நீ­ரக பாதிப்­பிற்­காக மருத்­துவ பரி­சோ­தனை மேற் கொள்ளும் போது தான் பல­ருக்கு முதன் முத­லாக அவர்­க­ளுக்கு சர்க்­கரை நோய் இருக் கிறது என்­பதை கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்கள்.

அதனால் நீரி­ழிவு நோய்க்­காக சாப்­பிடும் மருந்­துகள் சிறு­நீ­ர­கத்தை பாதிக்­கின்­றன என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. அதே தரு­ணத்தில் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மருத்­து­வர்கள் மருந்துகளையும், மாத்தி ரைக­ளையும் கொடுக்கும் போது, அவர்­களின் சிறு­நீ­ர­கத்தின் செயல்­பாட்­டையும், அதன் வீரி­யத்­தையும் கருத்தில் கொண்டே மருந்­து­க­ளையும், மாத் திரை­க­ளையும் பரிந்துரைப்பதால், சிறு­நீ­ரகம் பாதிப்­ப­டை­கின்­றன என்ற கருத்தை ஏற்க இய லாது.

அதே தரு­ணத்தில் சர்க்­க­ரைக்­காக மருத்­துவ நிபு­ணர்­களை கலந்து ஆலோ­சிக்­காமல் தவ­றான நேரத்தில், தவ­றான மருந்­து­க­ளையோ அல்­லது தவ றான மாத்­தி­ரை­க­ளையோ நீங்கள் சாப் பிட்டால் சிறு­நீ­ரகம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் அதிகம் என்­ப­தையும் நினைவில் கொள்­ளுங்கள்.

நீரி­ழிவால் காலில் ஏற்­பட்ட புண்­க­ளுக்கு பிளாஸ்டிக் சர்­ஜரி என்­பது சரி­யான தீர்வா?

காலில் புண்கள் வராமல் பாது­காப்­பது தான் இதற்­கான முதல் தீர்வு. அதையும் கடந்து புண் வந்­து­விட்டால், சர்க்க ரையின் அளவை கட்­டுக்குள் வைத்­துக்­கொண்டால், இதற்­காக விசேட மாக தயாரிக்கப்படும் காலணி களை பயன்­ப­டுத்­தினால் காலில் ஏற்­படும் புண்­ணிற்கு நிவா­ரணம் தரலாம்.

இதை யெல்லாம் கடந்து பெரிய அள­வி­லான புண் ஏற்­பட்டு, அதனால் மன உளைச்சல் ஏற்­பட்டு, தவிர்க்க முடி­யாத மருத்­துவ காரணங்கள் இருந்தால் மட்­டுமே பிளாஸ்டிக் சர்­ஜரி தீர்­வாக அமையும். அதனால் சர்க்­கரை நோயால் காலில் புண் ஏற்­பட்­ட­வுடன் அதற்கு பிளாஸ்டிக் சர்­ஜரி தான் சிறந்த தீர்வு என்று பொது­மைப்­ப­டுத்த இய­லாது.

சர்க்­கரை நோயா­ளிகள் எடுத்­துக்­கொள்ளும் மருந்­து­களும், மாத்­தி­ரை­களும் அவர்­களுக்கு இரு­பது சத­வீத பல­னைத்தான் தரும் என்றும், இந்நோய் முழு­மை­யாக கட்­டுக்குள் இருக்­க­வேண்டும் என்றால் வாழ்க்கை முறை யைத்தான் மாற்­றிக்­கொள்­ள­வேண்டும் என்று சொல்­கி­றார்­களே இது உண்­மையா?

உண­வுக்­கட்­டுப்­பாடு மற்றும் உடற்­ப­யிற்சி தான் சர்க்­க­ரையின் அள­வைக்­கட்­டுப்­ப­டுத்தும் முதன்­மை­யான சிகிச்சை முறை. அத­னுடன் சத்­தான உண­வு­களை, சரி­யான நேரத்தில் சாப்­பி­ட­வேண்டும். இதற்கு பின்­னரே மருந்­து­களும், மாத்­தி­ரை­களும் பலனை அளிக்­கின்­றன அல்­லது பல­ன­ளிக்கத் தூண்­டு­கின்­றன.

அதே போல் சர்க்­க­ரையின் அள­வி­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வதில் உண­விற்­கென ஒரு பங்­குண்டு. உடற்­பயிற் சிக்கௌ ஒரு பங்­குண்டு. இன்­சுலீன் போன்ற மருந்து மாத்­தி­ரை­க­ளுக்கு ஒரு பங்­குண்டு. தியானம் யோகா போன்ற பயிற்­சி­க­ளுக்­கென ஒரு பங்­குண்டு.

அதே தரு­ணத்தில் எம்­மு­டைய பாரம்­ப­ரி­யத்தில் யாருக்­கேனும் சர்க்­கரை இருந்­தி­ருக்­கி­றதா? என்­ப­தையும் கண்­ட­றிந்து, அதனை வராமல் தடுக்­கக்­கூ­டிய வழி­மு­றை­க­ளையும் கடை­பி­டிக்­க­வேண்டும். சர்க்க­ரையை கட் டுப்­ப­டுத்த வாழ்க்கை நடை­மு­றையை மாற்றிக் கொள்­ள­வேண்டும் என்று எச்­ச­ரிப்­பது சரி தான் என்­றாலும், அதற்­காக சர்க்­க­ரை­யினை கட்­டுப்­ப­டுத்­து­வதில் மருந்­து­களின் பங்­க­ளிப்பு இருபது சத­வீதம் என்­பதை உறு­தி­யாக ஏற்க வேண்­டி­ய­தில்லை.

ஜெனிட்டிக் இன்­ஜி­னி­யரிங் (Genetic Engineering) ஏரா­ள­மாக வளர்ந்­து­விட்ட இந்த கால கட்­டத்தில் அனைத்து வகை­யான சர்க்­க­ரையை கட்டுப் படுத்­தக்­கூ­டிய மருந்­துகள் கண்டறியப்பட்டிருக் கின்­றன. இருப்­பினும் சர்­க­கரை நோய் குறைய வில்­லையே ஏன்?

சர்க்­கரை நோய் என்றால் அதில் டைப் 1, டைப் 2, மோய்டி என எரா­ள­மான வகைகள் உள்­ளன. இவை­ய­னைத்­திற்கும் ஜெனிட்டிக் இன்­ஜி­னி­ய­ரிங்கால் மட்­டுமே தீர்­வ­ளிக்க இய­லாது. ஒரு பிரிவு சர்க்­கரை நோயைத்தான் ஜெனிட்டிக் இன்­ஜி­னி­ய­ரிங்கால் கட்டுப் படுத்த இயலும் என்றால் அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

அதே தருணத் தில் சர்க்­கரை நோய் குறை­யாமல் அதி­க­ரிப்­ப­தற்­கான காரணம், யாருமே சரி­ச­ம­வி­கித உண­வையோ, அல்­லது முறை­யான உடற்­ப­யிற்­சி­யையோ எடுத்துக் கொள்­வ­தில்லை. இளம் வய­தி­லேயே உடல் எடையை அதி­க­ரித்துக் கொள்­கிறோம். அதிலும் ஒரு சிலர் உடற்­ப­ரு­ம­னுக்கும் ஆளா கிறார்கள். இதனால் இன்­சுலீன் சுரப்­பியின் செயல்­பாட்டில் சுணக்கம் ஏற்­பட்டு சர்க்­கரை நோய் வரு­கி­றது.

சர்க்­கரை நோய்க்­கான நவீன சிகிச்சைக்ள் குறித்து..?

சர்க்­கரை நோய் என்­பது டீஸி­ஸல்ல. அது ஒரு டிஸ்­ஓர்டர் மட்­டுமே. தற்­போது வாரத்­திற்­கொரு முறை இன்­சுலீன் செலுத்திக் கொண்டால் போதும் என்ற சிகிச்சை வர­வி­ருக்­கி­றது. மூன்று நாளுக்கு ஒரு முறை போட்­டுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான இன்­சுலீன் வர­வி­ருக்­கி­றது.

விரைவில் இன்­சுலீன் பம்ப் என்ற ஒன்று அறி­மு­க­மா­க­வி­ருக்­கி­றது. இந்த பம்ப்பைப் பொருத்திக் கொண்டால் அதுவே உடலில் தாழ் நிலை இரத்த சர்க்கரையின் அளவை கண்டறிந்து அதுவா கவே இன்சுலீனின் அளவை அதிகரித்தோ அல்லது குறை த்தோ கொடுக்கும். அதிக சர்க்கரை என்றால் அதுவே குளு கோவான் என்ற மருந்தை தெரிவு செய்து, தேவையான அளவிற்கு செலுத்தும்.

அதனைத் தொடர்ந்து தற்போது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பேரி யாட்ரிக் என்ற உடற் பருமனுக்கான சத்திர சிகிச்சையும் ஒரு சிலருக்கு பரிந்து ரைக்கப்படுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இயலும். மேலும் இவை யெல்லாம் அதிக செலவுகளைக் கொண்ட சிகிச்சை முறை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply