சருமத்தை மின்ன வைக்கும் கேரட் மசாஜ்!!!

Loading...

சருமத்தை மின்ன வைக்கும் கேரட் மசாஜ்!!!பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அத்தகையவற்றால் உடல் மட்டும் ஆரோக்கியமாவதில்லை, உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்த ஒன்று. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேப்போல் சருமத்திற்கும் அழகைத் தருகிறது.
மேலும் சமீபத்தில் பழங்கள் மற்றும் காய்கள் சாப்பிட்டால் உடல் ஆரோகியமாகவும், அழகாகவும் இருக்கிறதா என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இவற்றை சாப்பிட்டால் ஆண், பெண் என்ற எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல், சருமம் அழகு பெறும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடை குறைந்து, சருமம் அழகாக இருப்பது நன்கு தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து பின்பற்றி பாருங்களேன்…
* உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்டப்பின் ஒரு கேரட்டை சாப்பிட வேண்டும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
* இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
* கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
* தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.
ஆகவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களையும் வாங்கி பயன்படுத்தத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply