சருமத்தை பாதுகாக்கும் கோகோ வெண்ணெய்

Loading...

சருமத்தை பாதுகாக்கும் கோகோ வெண்ணெய்மாய்ஸ்சரைசிங் தன்மையை முதன்மையாக கொண்டுள்ளதால் கோகோ வெண்ணெய் சிறந்த சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப் படுகின்றது. கோகோ வெண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உங்கள் சருமத்தை நல்ல முறையில் மாய்ஸ்சுரைசிங் செய்யும் தன்மை வாய்ந்தவை. மேலும் சொரியாசிஸ் மற்றும் எக்சிமா போன்ற சரும தொல்லைகளை சரிசெய்யும்.

இவை அனைத்தையும் தவிர்த்து, அது ஒரு மென்மையான நறுமணத்தை தருவதால் அரோமா தெராபியில் ஒரு போற்றத்தக்க பொருளாக விளங்குகின்றது. கோகோ வெண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்டாக விளங்குகின்றது. ப்ரீ ரேடிக்கல்கள் உங்கள் சரும அழகை சிதைத்து மூப்படையச் செய்யும்.

இந்த வெண்ணெய் உங்கள் இளமையை தக்க கவைக்க உறுதி அளிக்கும். இந்த வெண்ணெய் உங்கள் சருமத்தை நம்பத்தகுந்த முறையில் சீரமைகின்றது. கோகோ வெண்ணெய்யில் உள்ள கோகோ மாஸ் பாலிஃபீனால் சருமத்தின் ராஷஸ் அழித்து விடும். இதில் வைட்டமின் இ மற்றும் எ நிறைந்துள்ளதால் இது உங்கள் சருமத்தை சீரமைத்து நீண்ட நாள் வரை உறுதியாக வைத்திருக்கும்.

இதில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை சருமத்தில் ஏற்படும் வடுக்கள், பருக்கள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்சை குறைக்கும். பிரசவிக்கும் பெண்கள் இந்த வெண்ணெயை உபயோகித்து ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருந்து விடுபடலாம். இந்த கோகோ வெண்ணெய் உபயோகித்த சருமம் பருக்கள், வடுக்கள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருந்து விலகியே இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply