சமையல் டிப்ஸ்

Loading...

ருசி அதிகமான வடை !

தயிர் வடை செய்யும் போது உளுந்தம் பருப்புடன் ஐந்தாறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து அரைத்து செய்தால் மெத்தென்றும் வடை ருசியாகவும், பொலபொலவென்றும் இருக்கும்.

ஈசியான சமையலுக்கு..

உருளைக்கிழங்கை போலவே பீற்றூட்டையும் முழுதாகவே அவித்து, பிறகு தோலை உரித்துவிட்டு பொரியலோ வறுவலோ செய்தால் சத்துகள் வீணாகாது.வேலையும் சீக்கிரம் முடிந்து விடும்.

அடுத்த நாளே ஊறுகாய் !

எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன் நன்றாக கொதிக்கும் சுடு நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு கலக்கவும்.அதில் பழங்களை போட்டு மூடி வைத்து விடுங்கள்.சிறிது நேரம் கழித்து எடுத்து நறுக்கி,ஊறுகாய் போட்டால் மறுநாளே உபயோகிக்கலாம் கசப்பே இருக்காது.

தேங்காய் பால் உப்பு மா !

கோதுமை ரவை உப்புமா செய்யும் பொது தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் கொஞ்சம் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply