சமிபாட்டுத் தொகுதியில் உருவாகும் சில பிரச்சினைகள்

Loading...

சமிபாட்டுத் தொகுதியில் உருவாகும் சில பிரச்சினைகள்நார்ச்சத்து இல்லாத உணவுகளை அதிகமாக உட்கொள்ளும்போது நம் குடலில் பை போன்ற தசைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். இதற்குள் உணவுக்குழாய் மூலம் வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் தேங்கிவிடும்.

இதனால் குடலில் அடைப்பு ஏற்படும். சில சமயங்களில் ஓட்டையும் விழுந்துவிடும். இதை டைவர்டிகுலர் நோய் என்போம். டைவர்டிகுலரால் மலச்சிக்கல் ஏற்படாது. ஆனால் மலச்சிக்கலால் டைவர்டிகுலர் தோன்றும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அப்பண்டிக்ஸ் (appendix)

சிறுகுடலும், பெருங்குடலும் இணையும் இடத்தில் 2 அங்குல நீளத்திற்கு குடல்வால் உள்ளது. திடீரென ஏற்படும் வீக்கம், நாட்பட்ட வீக்கம் என குடல்வால் வீக்கம் இரண்டு வகைப்படும். நாம் உட்கொள்ளும் உணவின் சில துணுக்குகள் சில சமயங்களில் குடல்வால்வினுள் தங்கிவிடும்.

இவ்வாறு தங்கும் பொருள் பாக்டீரியா பாதிப்புக்குள்ளாகி குடல் வால்வில் உள்ள நெறித் திசுக்கள் வீக்கம் அடையும். இந்த வீக்கம் சிறுகுடலின் முடிவுப் பகுதியிலோ அல்லது பெருங் குடலின் ஆரம்ப பகுதியிலோ அடைப்பை ஏற்படுத்தும். இதுவே அப்பண்டிக்ஸ்.

ஒருவருக்கு அப்பண்டிக்ஸ் நோய் இருப்பின், தொப்புள் பகுதியில் வலி ஏற்படும். அந்த வலி வலதுபுறமாக கீழ்நோக்கி நகரும். வாந்தி, பசியின்மை தோன்றும். மிக மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மரணம் சம்பவிக்கலாம்.

ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இந்நோய் மிகுந்த பாதிப்பைத் தரும். இப்போது பல இளம் வயது பெண்களுக்கு குடல்வால் வீக்கம் ஏற்படுகிறது. இவர்கள் உடனடியாக சத்திர சிகிச்சை செய்துகொள்ளாவிடில், குடல்வால்வைச் சுற்றியிருக்கும் உறுப்புகளும் அதோடு சேர்ந்துகொள்ளும்.

குறிப்பாக,பலோப்பியன், குழாயும் மாட்டிக்கொள்ளலாம். இதனால் கருமுட்டை கர்ப்பப்பைக்குள் போக முடியாமல் மலட்டுத் தன்மை ஏற்படலாம். ஒருமுறை குடல்வால் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் இந்த நோய் வர வாய்ப்பு இல்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply