சத்தான கோதுமை ரவா தோசை

Loading...

சத்தான கோதுமை ரவா தோசைதேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – முக்கால் கப்,
அரிசி மாவு – கால் கப்,
கோதுமை ரவை – அரை கப்,
புளித்த மோர் – ஒரு கரண்டி,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
இஞ்சி – சிறு துண்டு,
கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

• அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

• சுவையான சத்தான கோதுமை ரவா தோசை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply