கோஸ் பனீர் கறி

Loading...

கோஸ் பனீர் கறி

தேவையானவை:

கோஸ் & கால் கிலோ, பனீர் & 200 கிராம், மிளகாய்தூள் & 2
டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவைக்கு, கறி வேப்பிலை &
சிறிது. தாளிக்க: கடுகு & கால் டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பட்டை & 1
துண்டு, எண்ணெய் & 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கோஸை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். பனீரை சற்று கனமாக
நீளவாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம், பட்டை
தாளித்து கோஸை சேருங்கள்.

10 நிமிடம் நன்கு வதக்கியபின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பனீர் சேர்த்து
பச்சை வாசனை போய் சுருளும் வரை கிளறி கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply