கோவை உருளை பொரியல்

Loading...

கோவை உருளை பொரியல்கோவக்காய் – கால் கிலோ
உருளை – 150 கிராம்
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
பூண்டு – 3
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப‌

கோவக்காயை நீள‌வாக்கில் மெல்லியதாக‌ நறுக்கி அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிரட்டி 5 நிமிடம் வைக்கவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பூண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதில் பிரட்டி வைத்த‌ கோவக்காயை சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.

பின்னர் உருளையை துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

காய்களை பிரட்டி விட்டு மூடி போட்டு வேக வைக்கவும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து சுற்றி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கிளறி விடவும். கோவக்காய் நன்கு சுருள‌ வெந்ததும் இறக்கவும்.

கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான‌ கோவை, உருளை பொரியல் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply