கோதுமை, பீட்ரூட் பேன் கேக்

Loading...

கோதுமை, பீட்ரூட் பேன் கேக்தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்,
பீட்ரூட் – 2,
பால் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கருப்பட்டி அல்லது வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,
தேன் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

• பீட்ரூட் துருவி தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் அரைத்த கலவையை போட்டு அதனுடன் கோதுமை மாவு, பால், கருப்பட்டி அல்லது வெல்லம், உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (இட்லி மாவு பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்).

• தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை கனமான தோசை போல வார்த்து, மூடிவைக்கவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

• அதன் மீது தேனைத் தடவி துண்டு போட்டு கொடுக்கவும். இதை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

• விருப்பப்பட்டால், முட்டையை அடித்து அதனுடன் மாவைக் கலந்தும் செய்யலாம்.

Loading...
Rates : 0
VTST BN