கோதுமை பழக்கஞ்சி

Loading...

கோதுமை பழக்கஞ்சிதேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 டீஸ்பூன்,
பால் – ஒரு கப்,
பனங்கற்கண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம், ஆப்பிள் – தலா ஒரு துண்டு,
கமலா ஆரஞ்சு சுளைகள் – 4.

செய்முறை:

• கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

• பழங்களை விதை நீக்கி மிக்ஸியில் போட்டு மசிக்கவும்.

• மீதமுள்ள பாலை நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

• சூடான பாலில் கரைத்த மாவு, பழக்கூழ், பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி பருகக் கொடுக்கவும்.

• இந்த கோதுமை பழக்கஞ்சி மிகவும் சத்தானது. குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள். டயட்டில் இருப்பவர்கள் இப்படியும் கோதுமையை சேர்த்துக்கொள்ளலாம்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN