கொழுப்பை கரைத்து, அழகை அதிகரிக்கும் வால்நட் பருப்பு!

Loading...

கொழுப்பை கரைத்து, அழகை அதிகரிக்கும் வால்நட் பருப்பு!உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் வால்நட் பருப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வால்நட் பருப்பின் தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள்(Antioxidant) அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால்(Polyphenal) என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் வால்நட்டில், கொலஸ்ட்ரால் 0கி, சோடியம் 2மிகி, பொட்டாசியம் 441 மிகி, புரதச்சத்து 15கி, விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது.

வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

வால்நட் பருப்பு, சாப்பிடுவதால் முதுமை மறதி, மனத்தளர்ச்சி போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.

மேலும் தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால், ஆறு மாதங்களில் கெட்ட கொழுப்பு குறைந்து, இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் குணமாகிறது.

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

வால்நட் எண்ணெய்யில் ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா 3 – இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

தோல்நோய்கள், பால்வினை நோய்கள், காசநோய்கள் போன்றவற்றிற்கு மருந்தாகிறது.

வால்நட் முந்திரி பர்ஃபி

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.

கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு பண்டம் இது.

வால்நட் – முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

பயன்கள்

இதனை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில், சாப்பிடக்கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும்.

இதய நோயாளிகளுக்கு சிறந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply