கொலஸ்ட்ராலை குறைக்கும் மீன்

Loading...

கொலஸ்ட்ராலை குறைக்கும் மீன்உணவுகளில் அடிக்கடி மீனை சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.
அதிக புரோட்டீன் சத்துள்ள மீனில், ஒமேகா 3 அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஒமேகா 3 அமிலம் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் கறுப்பு மீன்கள், சாலமன் மீன்கள், இதர துனா போன்ற மீன்கள் சிறந்த பலன் அளிக்கும்.

நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.

ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

மீன் வறுவல்

முதலில் வஞ்சிரம் மீனை நன்கு கழுவி ஆட்காட்டி விரல் நீள அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

அதனை அகற்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிசறவும்.

பின்னர் கான்ஃப்ளவர் மாவு, உப்பு, எலுமிச்சையை பிழிந்து விட்டு அனைத்து மீன் தூண்டுகளின் மீது படுமாறு பிசறவும்.

மீன் துண்டு கலவையை நன்கு மூடி ஃப்ரீசரில் அரை மணிநேரம் வைக்கவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி ஐந்தைந்து துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சிரம் மீன் பொரியல் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply