கைப்பேசி விற்பனையில் Blackberry சாதனை

Loading...

கைப்பேசி விற்பனையில் Blackberry சாதனைமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Blackberry ஆனது இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டுப் பகுதியில் 1.9 மில்லியன் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளது.
இதேவேளை இக்காலாண்டுப் பகுதியில் 793 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வியாபாரத்தினை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதில் 46 சதவீதமானவை வன்பொருள் விற்பனையின் மூலமும், 48 சதவீதமானவை சேவைகள் மூலமும், எஞ்சியவை மென்பொருள்கள் விற்பனை மூலமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனூடாக 16 மில்லியன் டொலர்கள் இலாபமாக இந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இப்பெறுமதியானது கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் கிடைத்த இலாபத்தை விடவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply