கேரட் – கொத்தமல்லி சப்பாத்தி

Loading...

கேரட் – கொத்தமல்லி சப்பாத்திதேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
கேரட் – 2
கொத்துமல்லி தழை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை :

• கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

• மிக்சியில் கேரட், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

• அரைத்த கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிறிது என்னை/நெய் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மெதுவாக இருக்கும். காய்களிலேயே தண்ணீர் பசை இருப்பதால் அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

• மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும். உருட்டி வைத்துள்ள சப்பாத்தி மாவை போட்டு இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

• கேரட்டின் நிறம் இந்த சப்பாத்திக்கு ஒரு நல்ல மஞ்சள் நிறத்தை தரும்.

• இந்த சப்பாத்தியில் காய்கள் இருப்பதால் இதற்கு சைடு டிஷ் தயிர் பச்சிடி போதும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply