கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும்

Loading...

கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும்பெண்களின் கூந்தலைப் பற்றி காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகமாக பேசப்பெறுகின்றன. நீண்ட தலைமுடியையே கூந்தல் என அழைக்கின்றோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் வித்தியாசமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது. கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல… அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர். முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது. தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.

சிலருக்கு இந்நோயின் தாக்கம் கண் புருவங்களிலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும் இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்த பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும்.

கூந்தல் பராமரிப்பு என்பது ஒரு தனிக்கலை எனலாம். அக்காலத்தில் பாட்டிமார், அம்மா, அக்காள் போன்றவர்கள் உதவியுடன் கூந்தலை சிக்கெலெடுத்து, பின்னி, மலர்களால் அலங்கரித்து சிங்காரிப்பதெல்லாம் பொழுது போக்காக செய்தார்கள். இன்றைய அவசர உலகில் சாத்தியமாகாமல் விடுவதும் ஒரு காரணமாகும்.

தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கூந்தல் உதிர்தல் அதிகமானதால், சிலருக்கு வழுக்கை தலை கூட வந்துவிட்டது. அதுவும் இத்தகைய வழுக்கை பிரச்சனை இளமையிலேயே வந்திருப்பது வேதனைக்குரியதே.

எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்தவோ அல்லது உதிர்தலின் அளவை குறைக்கவோ முடியும்.

இதற்கு இயற்கை முறைகளே சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய பொருட்கள் என்னவென்பதையும் அவை எவ்வறு பயன் படுத்தலாம் என்ற விபரங்களும் கீழே பதியப் பெற்றூள்ளன.

அத்துடன் கூந்தல் வளர்ச்சிக்கு உடலில் சுரக்கும் ஹோமோன்களும் காரணிகளாகின்றன. அவ்வாறான ஹோமோன் சுரப்புகளை சுரக்கத் தூண்டும் சில உணவு வகைகளையும் நமது உணவில் சேர்த்துக் கொள்வதனால் அடர்த்தியான, கருமையான கூந்தலைப் பெறுவதோடு சுகதேகியாகவும் வாழலாம் என்பது வைத்திய நிபுணர்களின் கருத்து. அவற்றை தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப சரியானதை தெரிவு செய்து பாவித்து பயன்பெறுவது உங்கள் பொறுப்பு.

பொடுகு வராமல் தடுக்க
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.

பொடுகினை அழிக்க
பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.
வேப்பிலை 2 கைப்பிடி
நல்ல மிளகு – 15-20
இரண்டையும் அரைத்து தலையில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.
அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.
வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி
வெந்தயம் 2 தேக்கரண்டி
இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.
தேங்காய் பால் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

தலைமுடி பராமரிக்கும் முறை:
1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .

15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

தலை முடியில் பேன், ஈர் உள்ளவர்கள்:
தலை குளித்த (முழுகிய) பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி .15 நிமிடம் வரை சுவற (ஊறவைக்கவும்) விடவும். பின்பு தலைமுடியை பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈர், பேன் எல்லாம் வந்து விடும். இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை செய்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

தலைமுடிக்கு உகந்த வெந்தயம்:
1. இரவு படுக்கப் போகும் முன்பு வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும்.

2. மறுநாள் காலையில் அதை விழுதாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் தலையில் சுவற விடவும்.

3. பின்பு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

4. கோடை காலத்தில் இந்த வைத்தியம் மிகவும் ஏற்றது. கண்களுக்கும் குளிர்ச்சியை அளிக்கும்.

5. உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

6. சளி பிடித்திருக்கும் போது மற்றும் காய்ச்சல் சமயங்களில் இதனை செய்ய வேண்டாம்.

கூந்தல் கருமையாக வளர:
1. உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கருமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

2. உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது.

3. தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

4. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.

5. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.

6. ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும். கண்டிஷரை முடியின் வேர்களைவிட நுனிப் பாகத்தில் தடவுவது நல்லது.

7. தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு நுனிப்பகுதியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் பெண்களின் கூந்தல் வளர்ச்சி குன்றி அழகு கெடுகிறது.

8. இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண, நுனிப் பகுதியை அடிக்கடி சிறிய அளவில் வெட்டி விட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிச் செய்வது பலன் அளிக்கும்.

9. மேலும் மாதம் ஒருமுறையாவது ஷாம்பூ தடவிய பின் நீண்ட நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். சிறந்த நிறுவனங்களின் பிராண்டட் ஷாம்பூகளையே பயன்படுத்த வேண்டும். தலைமுடியை அதிக சூட்டில் உலர்த்த வேண்டாம்.

10. குளித்தவுடன் ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது தொப்பியை உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்.

11. கூந்தலை பராமரிப்பதற்கு ஏராளமான அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அதுபோன்ற அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் ஹேர் பேக்குகள்!!!
அனைவருக்குமே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்வது நன்கு தெரியும். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை அதிகரித்து, வறட்சியால் கூந்தல் உதிர்தலை தடுக்கலாம் என்பது தெரிந்தது.

ஆனால் எப்படி தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் சிறந்த பொருளாக உள்ளதோ, அதேப் போல் தேங்காய் பாலும் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதற்கு தேங்காய் பாலை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி, தேங்காய் பால் கூந்தலை அடர்த்தியாக்கவும் உதவும். எனவே சமைக்கப் பயன்படும் தேங்காயை கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்தி, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, நீளமாக அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள்.

தேங்காய் பாலை வைத்து எப்படியெல்லாம் ஹேர் பேக் போடலாம்
தேங்காய் பால்: தேங்காய் பால் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். இந்த தேங்காய் பால் கடைகளிலும் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஒரு தேங்காயை நன்கு அரைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலைக்கு குளிக்கும் போது தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

வேண்டுமெனில் இதனை ஷாம்பு போட்டு குளித்தப் பின்னரும் போடலாம். இதனால் கூந்தல் நன்கு மென்மையுடன் இருக்கும்.
தேங்காய் பால் மற்றும் தேன்:
இந்த முறையில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, தேங்காயை நறுக்கி போட்டு, நீரை நன்கு 5-10 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் அதனை குளிர வைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 40 நிமிடம் ஊற வைத்து, பின் கூலுந்தலை அலசினால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

தேங்காய் பால், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:
தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள எலுமிச்சை சாறு கூந்தல் உதிர்தலை தடுத்து, ஸ்கால்ப்பில் இருக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு பொடுகுத் தொல்லையை போக்கும்.

மேலும் இதில் உள்ள தயிரும் கூந்தலுக்கு ஏற்ற ஒரு பொருள். எனவே இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்தலோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

தேங்காய் பால் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்:
இயற்கையாகவே கூந்தல் உதிர்தலை தடுப்பதற்கு இந்த ஹேர் பேக்கை ட்ரை செய்து பார்க்கலாம். இதற்கு தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது வெதுவெதுப்பான நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து, தலைக்கு மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளித்தால், சிறந்ததாக இருக்கும்.

தேங்காய் பால் மற்றும் வெந்தயம்:
இந்த ஹேர் பேக்கில் வெந்தயப் பொடியில் தேங்காய் பால் ஊற்றி, பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று மென்மையாக, பட்டுப் போன்று மின்னும்.

கூந்தலை செழுமையாக்க:
1. வெந்தயம் மற்றும் கடுகை ஊறவைத்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து அதனை தலையில் தேய்த்து வந்தால் குளுமையும் தலைமுடிக்கு ஆரோக்கியமும் கிட்டும்.

2. 5 செம்பருத்தி இலைகளை எடுத்து அதனை நன்றாக சாறாக செய்து கொள்ளவும் இதனைக் கொண்டு தலையை அலசவும்.

3. தேயிலை சாறைக் கொண்டு தலை முடியை வாரம் ஒரு முறையாவது அலசி வரவும். இதனால் முடி நிறம் மாறாமல் இருக்கும்.

4. தலைக்குக் குளித்தப் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை தேய்த்து அலசினால் நல்ல கண்டீஷனராக செயபடும்.

5. குளிக்கும் முன் சூடான தேங்காய் எண்ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து பிறகு அலசவும். இதனை தினசரி செய்து வரலாம்.

6. முட்டை நிறைய ஹேர் பேக்குகளில் பயன்படுகிறது. இத்தகைய முட்டை அனைத்து வகையான கூந்தலுக்கும் சிறந்தது. அதிலும் முட்டையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்றும், மென்மையாகவும் இருக்கும்

7. வினிகர் வறட்சியான கூந்தலை போக்குவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் சிறந்த பொருள். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சிறிது ஊற்றி, அலச வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியின்றி, பொலிவோடு காணப்படும்.

8. தயிர் பொடுகுத் தொல்லை, கூந்தல் வெடிப்பு, வறட்சியான ஸ்கால்ப் போன்ற பிரச்சனைகளைப் போக்குவதில் தயிர் சிறந்தது. எனவே இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள், தயிரை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

9. பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீர், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போன்றவற்றுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கும் போது, ஸ்கால்ப் நன்கு சுத்தமாக இருப்பதோடு, அதிகமான வறட்சி இல்லாமலும் இருக்கும்.

10. எலுமிச்சை ஸ்கால்ப் தொடர்பான பிரச்சனைகளைப் போக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவும். அதற்கு எலுமிச்சையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

11. தேன் கூந்தலை நரையாக்கும் என்று அனைவரும் பயப்படுகின்றனர். ஆனால் தேன் கூந்தலை பட்டுப் போன்று வைப்பதில் சிறந்த ஒன்று. மேலும் இது ஒரு சிறந்த நேச்சுரல் மாய்ச்சுரைசர் என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த தேன் கூந்தல் மற்றும் சருமத்தை வறட்சியின்றி, மென்மையோடு வைத்துக் கொள்ள உதவும்.

12. சோள மாவு சமையலறையில் கிடைக்கும் அழகுப் பொருட்களில் சோள மாவும் ஒன்று. இத்தகைய சோள மாவை கூந்தலுக்குப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று மின்னும்.

13. அவகேடோ பொலிவிழந்து, வறட்சியோடு காணப்படும் கூந்தலுக்கு அவகேடோ மிகவும் சிறந்தது. ஆகவே அவகேடோவை வைத்து ஹேர் மாஸ்க்குகள் போட்டால், இத்தகைய பிரச்சனையை போக்கிவிடலாம்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்
தற்போது அழகிய அடர்த்தியான கருங் கூந்தலை பெறுவது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம், போதிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இல்லாததும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், அதிகப்படியான மனஅழுத்தமும் தான் காரணம். இத்தகைய பிரச்சனைகள் இருப்பதால், அழகில் குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக கூந்தல் மற்றும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

கூந்தல் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அதில் புரோட்டீன் உணவுகள் முக்கியமானவை. எனவே அத்தகைய புரோட்டீன் உணவுகளை உண்டால், புரோட்டினால் உருவான கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும். மேலும் அந்த உணவுகளில் உள்ள மற்ற சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, ஜிங்க் மற்றும் தேவையான ஃபேட்டி ஆசிட்களும் உடலுக்கு கிடைத்து, கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:

1. மீன் அதிகம் சாப்பிட்டாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். எப்படியெனில் மீனில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி காணப்படும். அதிலும் சால்மன், ஹெர்ரிங் போன்றவை மிகவும் சிறந்தது.

2. நட்ஸில் பாதாம் மற்றும் வால் நட் இரண்டிலும் போதுமான அளவில் ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால், முடி செல்கள் பாதிப்படையாமல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் வால் நட்ஸில் காப்பர் உள்ளதால், கூந்தலுக்கு வேண்டிய கருமை நிறம் கிடைத்து, கூந்தலும் பட்டுப் போன்று மின்னும்.

3. கடல் சிப்பி கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. பொதுவாக கூந்தல் உதிர்தல் ஜிங்க் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. எனவே கடல் சிப்பி, முட்டை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

4. உருளைக்கிழங்கு வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளான உருளைக்கிழங்கு, கேரட், மாம்பழம் மற்றும் பூசணிக்காய் போன்றவை கூந்தலுக்கு மிகவும் நல்லது. இந்த உணவுகளை சாப்பிட்டால், தலையில் ஸ்கால்ப்பில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள், தலைக்கு வேண்டிய எண்ணெயை சுரந்து, தலையை வறட்சியடையாமல் தடுக்கும்.

5. முட்டை அனைவருக்குமே முட்டையில் தலை முதல் கால் வரை வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது என்பது தெரியும். எனவே இதனை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு நல்லது.

6. பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை மற்றும் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் மயிர்கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களான பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

7. சோயா பீன்ஸ் மற்றும் காராமணி நிறைய பேர் வாயுத்தொல்லையின் காரணமாக இந்த பீன்ஸ்களை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த பீன்ஸ்களில் கூந்தலை ஆரோக்கியமாகவும், வலுவோடும் வைத்துக் கொள்ளும் புரோட்டீன், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் பயோடின் போன்றவை உள்ளது.

8. பால் பொருட்கள் பால் பொருட்களில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது என்று நிறைய மக்கள் இதனை அதிகம் சாப்பிட பயப்படுகின்றனர். ஆனால் நல்ல வலுவான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமென்றால், இந்த உணவுகளை நிச்சயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்களல் வைட்டமின் பி5, வைட்டமின் டி மற்றும் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் உள்ளன.

9. பெர்ரிஸ் பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இந்த சத்து கூந்தலின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. இந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கூந்தல் உதிர்தலைத் தடுத்து, கூந்தலை வலுவோடு வைத்துக் கொள்ளலாம்.

10. சிக்கன் சிக்கனிலும் புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து அதிக அளவில் உள்ளது. ஆகவே அசைவ உணவுகளில் சிக்கனையும் அதிகம் சேர்த்து, நல்ல அழகான கூந்தலைப் பெறுங்கள்.

கூந்தல் அலங்காரமும் ஆலோசனைகளும்:
விருந்து, விசேஷம் என்று எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பெண்கள் அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அழகென்றால் அங்கொன்றும், இங்கொன்று மாக இல்லாது உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அதிலும், குறிப்பாக உச்சி அதாவது கூந்தல் அழகு சூப்பரோ சூப்பராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

கூந்தல் அலங்காரத்தில் பெண்களின் கற்பனைக்கு எல்லைகளில்லை. அந்த கற்பனைகளை எல்லாம் நிஜமாக்கும் விதத்தில் கூந்தல் அலங்காரத்திற்கு தேவையான இணைப்பு ஆபரணங்கள் புதிது புதிதாக இப்போது நிறைய கிடைக்கின்றன.

உடுத்தியிருக்கும் புடவையின் நிறத் திற்கு பொருத்தமான இணைப்பு ஆபரணங்களை கூந்தலில் சேர்த்தால், ஜொலிக்கும் அழகு, அபாரம் என்று சொல்லவைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், முகத்தின் அமைப்புக்கு தக்கபடி கூந்தலின் முன்பகுதி அலங்காரம் இருக்க வேண்டும்.

அழகியல் நிபுணர்கள் தரும் அழகான ஹேர் ஸ்டைல் டிப்ஸ்.

முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை %Eக இப்போது நிறைய %கிடைக்கின்றன.

உடுத்தியிருக்கும் புடவையின் நிறத் திற்கு பொருத்தமான இணைப்பு ஆபரணங்களை கூந்தலில் சேர்த்தால், ஜொலிக்கும் அழகு, அபாரம் என்று சொல்லவைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், முகத்தின் அமைப்புக்கு தக்கபடி கூந்தலின் முன்பகுதி அலங்காரம் இருக்க வேண்டும்.

அழகியல் நிபுணர்கள் தரும் அழகான ஹேர் ஸ்டைல் டிப்ஸ்.

முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை %Eக இப்போது நிறைய கிடைக்கின்றன.

உடுத்தியிருக்கும் புடவையின் நிறத் திற்கு பொருத்தமான இணைப்பு ஆபரணங்களை கூந்தலில் சேர்த்தால், ஜொலிக்கும் அழகு, அபாரம் என்று சொல்லவைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், முகத்தின் அமைப்புக்கு தக்கபடி கூந்தலின் முன்பகுதி அலங்காரம் இருக்க வேண்டும்.

அழகியல் நிபுணர்கள் தரும் அழகான ஹேர் ஸ்டைல் டிப்ஸ்.

முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொறுத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.

முக அழகை மாற்றும் நீளமுகம் கொண்டவர்கள் ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.

அதே சமயம் அகலமான முகம் கொண்டவர்கள் முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

உருண்டை முகம் கொண்டவர்கள் கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம். நடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

தாடை நீண்ட ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.

அகலமான நெற்றி அமைந்துள்ளவர்கள் முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

குட்டை கழுத்து கொண்டவர்கள் குதிரைவால் கொண்டை போடலாம் அம்சமாக பொருத்தும்.

அழகான ஹேர் ஸ்டைல் நீளமான முடி உள்ளவர்கள் அதிக அளவில் ஹேர் ஸ்டைல் செய்யலாம். பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும். முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம்.

கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான். ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும். கொண்டை போடலாம்

நீளக்கழுத்து கொண்டவர்கள் காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

நடுத்தர அளவில் அளவான கழுத்து கொண்டவர்கள் பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழுத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

நீண்ட கழுத்து அமைந்தவர்கள் கழுத்தை ஒட்டினால்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம். முகம் உருண்டையாகும்

உருண்டைமுகமும் அதிக முடியும் கொண்டவர்கள் உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும். அதேசமயம் ஒவல் முகம் அமைந்தவர்கள் காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

அழகு அள்ளிச் செல்லும் சதுர முகம் கொண்டவர்கள் தளர விட்டு கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும்.

குள்ளமானவர்கள் சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள். குண்டானவர்கள் கொண்டை போடுவதை விட பின்னல் நல்லது.

உயரமானவர்கள் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும். விஷேங்களுக்கு செல்லும் போது எல்லோருமே கொண்டைவலையில் அலங்காரமாக ஜமிக்கி ஒட்டி உங்களை ரிச்சாக காட்டும் . அனைவரின் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும்.

இந்த ஸ்டைல் நல்லா இருக்குதுதானே! கூந்தல் முழுவதையும் ஒருபுறமாக கொண்டுவந்து, கட்டி `சைடு ரோல்’ செய்யவேண்டும்.

இதற்கு `ஸ்ட்ரீம் ஸ்டைல் கூந்தல் அலங்காரம்’ என்று பெயர். கவுன் அணியும்போதும், விருந்துகளில் பங்கேற்கும்போது அணியும் உடைகளுக்கும் இது பொருந்தும்.

சூப்பரான இந்த கூந்தல் அலங்காரத்தின் பெயர், `ப்ளவரி ஸ்டைல்’. செயற்கை கற்கள் பதிப்பிக்கப்பட்ட வட்டம் கூடுதல் அழகு சேர்க்கிறது. மொத்தமாகப் பார்த்தால் ஒரு பூ, பூத்ததுபோல் இருக்கும்.

இதன் பெயர் கேமரூன் ஸ்டைல். பெரிய `பெட்டல்ஸ்’ இணைக்கப் பட்டிருக்கிறது. மேல் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் டியாரா, கிரவுன்க்கு பதிலாக ஜொலிக்கும்.

இதுவும் கேமரூன் ஸ்டைல்தான். சிறிய வகை பெட்டல்ஸ் கோர்க்கப்பட்டு, பூப்போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

இது ஈஸியான ஸ்டைல். அதனால் `ஈஸி ஸ்டைல்’ என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். கூந்தலைச் சீவி, மேல் நோக்கிக்கட்டி அலங்காரம் செய்துவிட்டு ஒற்றையடிப் பாதை போல் வரிசையாக கற் களை கோர்த்து ஜொலிக்கச் செய்யவேண்டியதுதான். இந்த கூந்தல் இணைப்புகள் `பார்ட்டி கவுன்’ அணியும்போது கூடுதல் அழகுதரும்.

பழமையாகவே இருந்தாலும் மக்களை பளிச்சென ஈர்க்கும் தன்மை கொண்ட பாரம்பரிய மாடல் அலங்காரம் இது. டயமன்ட் வடிவத்திலான செயற்கை கற்களின் இணைப்பு அழகுக்கு மெருகேற்றுகிறது.

ஒவ்வொரு பெண்ணிற்கு ஒவ்வொரு வடிவ முகம். சிலருக்கு நீள முகம். சிலருக்கு உருண்டை முகம், சிலருக்கு இதய வடிவ முகம். ஒவ்வொருவரும் தங்களின் முக அமைப்பிற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் போடவேண்டும். அப்பொழுதுதான் அது பாந்தமாய் பொருந்தி வரும்.

எந்த முகத்திற்கு எந்தவகையான தலை அலங்காரம் ஏற்றது என்று ஆலோசனை கூறுகின்றனர் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டுகள்.

முட்டை வடிவ முகம் முட்டை வடிவமான முகம் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தலை குட்டையாக வெட்டினால் அழகான, அமைப்பான முக அழகு கிடைக்காது. ஓரளவு நீளமாக, அலையடிப்பது போன்ற ஸ்டெப்களுடன் கூடியவால்யூம் லேயர்ஸ்’ கட்டிங் செய்யவேண்டும். இந்த வகை ஹேர் கட் உங்கள் முகத்தின் இருபுறமும் கத்தையாக விழுந்து, ஒடுங்கிய முகத்தை அகலமாக, அழகாக தோன்றச் செய்யும். இந்த கூந்தல் அலங்கார முறையை சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் மங்கையர் விரும்புகின்றனர்.

ஓவல் முக அமைப்பு கொண்டவர்களுக்காக 25 க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் முறைகள் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது.

நீளமான முகம்: நீளமான முகத்தைக் கொண்டவர்கள் குட்டையாக முடி வெட்டலாம். நீளமாக முடி இருந்தால் அதை சுருட்டி அலை அலையாய் சின்னதாக்கலாம். இதனால் முகம் சின்னதாக தெரியும்.

இதயவடிவ முகம்: இதய வடிவ முகம் அரிதாக இருக்கும். இவர்கள் சைடில் கட் செய்து விடலாம். லேயர் லேயராக கட் செய்தால் முகத்திற்கு அம்சமாக இருக்கும். முகமும் வடிவமாய் இருக்கும்.

சதுர வடிவ முகம்: சதுர முகமும் நீள கூந்தலும் கொண்டவர்கள் தங்கள் முகத்திற்கு ஏற்ப ப்ளாட் கட்டிங் செய்து கொள்ளலாம். சைடில் கொஞ்சம் வெட்டி விட்டால் அம்சமாக இருக்கும். முக வடிவம் சற்று மாறுதலாகும்.

உருண்டை முகம்: பெரும்பாலானவர்களுக்கு உருண்டை வடிவ முகம் இருக்கும். இவர்களுக்கு நீளமாக, ஸ்ட்ரெயிட் கூந்தல் அலங்காரம் அழகாய் பொருந்தும். நடு முதுகு வரை வெட்டி கொஞ்சம் சுருட்டி விட்டாலும் பொருத்தம்தான்.

ரிசப்சன், பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும் போது உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப அசத்தலாய் ஹேர் ஸ்டைல் செய்து போங்களேன். அனைவரின் கண்களும் உங்கள் மீதுதான் இருக்கும்.

அனைவருக்குமே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்வது நன்கு தெரியும். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை அதிகரித்து, வறட்சியால் கூந்தல் உதிர்தலை தடுக்கலாம் என்பது தெரிந்தது.

ஆனால் எப்படி தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் சிறந்த பொருளாக உள்ளதோ, அதேப் போல் தேங்காய் பாலும் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதற்கு தேங்காய் பாலை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி, தேங்காய் பால் கூந்தலை அடர்த்தியாக்கவும் உதவும். எனவே சமைக்கப் பயன்படும் தேங்காயை கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்தி, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, நீளமாக அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள்.

திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணின் கூந்தலை பராமரிப்பது எப்படி? படங்கள் கீழே பதியப்பெற்றுள்ளன

மணப்பெண் அலங்காரம் மிகவும் முக்கியமானது கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணின் கூந்தல் அலங்காரம் பற்றி பார்போம் .

மணப்பெண்ணுக்கு கூந்தல் அலங்காரம் செய்யும் முன்பு,கூந்தலின் முன் பகுதியை அழகு படுத்துவது மிக முக்கியம் .

திருமணம் அன்று காலையில்,அடர்த்தியாக முகங்களில் சாயங்களை பூச வேண்டாம்.

வியர்த்து கொட்டும். உங்களின் அலங்காரம் மிதமாக இருந்தால் ,முகம் பிரகாசமாக இருக்கும்

பாலேடு, பால் போன்ற வகையில் செய்த சாயங்களை பூசாமல் வாசனை திரவியங்களில் செய்த மாவுகளை முகத்தில் பூசலாம்.இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை வைத்து முகப்பொலிவு பெறலாம். கூந்தல் அலங்காரம் செய்வதற்கு முன்பாக முகத்திற்கு நமது வீட்டில் இருக்கும் குளிர் சாதனப் பெட்டியில் கிடைக்கும் பனிக்கட்டியில் ஒத்தடம் கொடுக்கலாம் .

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம்.முகத்தின் முன்புறம் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு முன் வரிசை (front set ) என்று பெயர் .இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புற தலையை அலங்கரிக்க வேண்டும் .

மணப்பெண் அலங்காரத்தில் பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்வது, பின்னலில் பூ வைப்பபதற்கு பதில் ஜரிகை –முத்து-கற்களால் ஆன கைவேலைப்பாடுகளில் செய்வதும் அழகு தரும். குழல் பின்னல் –ஐந்துகால் பின்னல் –மேலே கொண்டை-கிழே பின்னல் ,இப்படி பலவகைகள் உண்டு .புகைப் படங்களை பார்த்தால்தான் உங்களுக்கு புரியும் .

மாலை நேர வரவேற்பு அலங்காரத்தில் பின்னல் வேண்டும் என்று விரும்புவர்கள் கிழ்கண்ட புகைபடத்தைப் பார்த்து இதேப் போலும் அல்லது வேறு வகைகளில் சிகையலங்காரம் செய்து கொள்ளலாம் .

நீண்ட முடி உள்ளவர்கள் தங்க நூலினால் பின்னலைப் பின்னலாம் .மேலே கொண்டை கிழே பின்னல் ,குழல்ப் பின்னல் ,அடுக்கடுக்கு பின்னல் ,தங்க நிறம் கொண்ட செயற்கைப் பொருளில் ஆன வளையல்களை பின்னல்களில் பயன்படுத்தலாம் .மிகவும் அழகாக இருக்கும்

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம்,பருமன் ,கழுத்தின் உயரம் ,கழுத்தின் சுற்றளவு போன்றவற்றை மிக உன்னிப்பாகக் கவனத்தில்கொண்டு சிகையலங்காரத்தில் ஈடுபட வேண்டும் .அப்போதுதான் மணப்பெண்ணின் அழகு குறைய வாய்ப்பில்லை .

குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறுகொண்டை போடலாம் .நீண்ட கழத்து இருந்தால் கழுத்தை மூடியவாறு கொண்டையை இறக்கியவாறு அமைக்கலாம் . அமைத்தால் மிகவும் அழகாக இருக்கும் .

முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி அழகுப் பார்க்கலாம் .இது முகத்தை அகலமாக காட்டும் .

அகல முகம் உடையவர்கள் முகத்தின் முன்பக்க முடியை தூக்கி காட்டுவதன்மூலம் முகத்தை உருண்டையாக காட்டலாம்.நடுவில் வகிடு இருக்கும் இடத்தில ஒரு அழகான நெற்றிச் சுட்டியை அணிவித்தால் மணப்பெண்ணின் தோற்றம் பார்ப்பவர் மனதில் நீங்கா இடம் பெறுவர்.

இல்லையென்றால் காதின் ஒரு பக்கத்தில்லிருந்து,தலைமுடியை மறுபக்கதிற்கு வாரி எடுத்துச்சென்று கொண்டை ஊசி %A

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Comments are closed.