குதிரைவாலி எள் சாதம்

Loading...

குதிரைவாலி எள் சாதம்தேவையான பொருட்கள் :

குதிரைவாலி சாதம் – ஒரு கப்

வறுத்து அரைக்க:

கறுப்பு எள் – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு,
கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

• எள்ளைத் தண்ணீர் விட்டுக் நன்றாக கழுவி கல் இல்லாமல் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள்.

• வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள்.

• ஆறியதும் மிக்சியில் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்து, அதை குதிரைவாலி சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள்.

• வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான குதிரைவாலி அரிசி எள் சாதம் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply