கார் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் Audi S8 Plus

Loading...

கார் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் Audi S8 Plusவிலையுயர்ந்த கார்கள் தயாரிப்பு பெயர் போன Audi நிறுவனம் Audi S8 Plus எனும் புதிய காரினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
605 குதிரை வலுக்கொண்ட இக் காரானது 3.8 செக்கன்களில் ஓய்விலிருந்து மணிக்கு 60 மைல்கள் எனும் வேகத்தை அடையவல்லது.

மேலும் இது மணிக்கு 189.5 மைல்கள் எனும் உச்ச வேகத்தில் பயணிக்கும் ஆற்றலைக் கொண்டதாக காணப்படுகின்றது அதாவது மணிக்கு 305 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியது.

கண்கவர் வடிவம் மற்றும் வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்காரினை எதிர்வரும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்வதற்கு Audi நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இக் காரின் விலையானது 145,200 பவுண்ட்ஸ்களாக காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply