கார்பனின் அளவை கணிப்பிட தயாராகும் செயற்கைக்கோள்கள்

Loading...

கார்பனின் அளவை கணிப்பிட தயாராகும் செயற்கைக்கோள்கள்வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பன், காபனீரொட்சைட்டுக்களினால் வளிமண்டலம் விரைவாக மாசடைந்து வருகின்றமை அறிந்ததே.

இதனை தடுப்பதற்கான ஆய்வில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை சீனாவும் இவ்வருட ஆரம்பத்தில் ஆய்வின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இதன்படி வளிமண்டலத்தில் ஒரு பில்லியன் தொன்கள் நிறைகொண்ட காபனீரொட்சைட் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டின் அளவை கண்காணிக்க இரு செயற்கைக்கோள்களினை விண்ணில் ஏவ சீனா முயற்சித்துவருகின்றது.

அடுத்த வருடம் இத்திட்டத்தினை நிறைவேற்ற எண்ணியுள்ளதுடன், இதன் மூலம் பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் அல்லது காபனீரொட்சைட்டின் அளவினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply