காய்கறி மிளகு மசாலா

Loading...

காய்கறி மிளகு மசாலாதேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் உருளை கிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்து 1/2 கிலோ
மிளகு தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் -2 ஸ்பூன்
எண்ணெய் -1 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – சிறிய தூண்டு (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – 1 கை (பொடியாக நறுக்கியது)

தாளிக்க :

பட்டை – 2
பிரிஞ்சி இலை – 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி
ப.மிளகாய் – (பொடியாக நறுக்கியது)

செய்முறை :

* காய்கறிகளை சிறிதளவு உப்பு, 1 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வேக வைத்துக்கொள்ளவும்

* கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.

* அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் சேர்க்கவும்.

* அடுத்து மிளகு தூள், தனியா தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.

* காய்கறிகளில் நன்கு மசாலா சேர்ந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply