காதலர் இல்லை என கவலையா.? இதோ வந்தாச்சு அப்பளிகேசன்..!

Loading...

காதலர் இல்லை என கவலையா.  இதோ வந்தாச்சு அப்பளிகேசன்..!காதலர்கள் தினத்தன்று தனக்குக் காதலர் இல்லை என்று ஏங்குபவர்களுக்காக ஒரு புது அப்ளிகேஷனை உருவாக்கியிருக் கிறார்கள் மாத்யு ஹோமன், கைல் டபோர். ‘இன்விசிபிள் பாய்ஃப் ரெண்ட்’ என்ற இந்த அப்ளிகேஷனில் உங்களுக்குப் பிடித்த பெயர், பிடித்த உருவம், குணாம்சம் எல்லாம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம். உங்களுடைய தகவல்களையும் அதில் குறிப்பிட வேண்டும். கட்டணம் செலுத்திவிட்டுக் காத்திருந்தால், உங்களுடைய இன்விசிபிள் பாய்ஃப்ரெண்டிடம் இருந்து மெசேஜ் வரும். மெயில் வரும். தொலைபேசியில் உரையாடவும் முடியும். நீங்கள் எப்படி எல்லாம் பாய்ஃப்ரெண்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் இந்த இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் இருப்பார். சண்டை, அழுகை, கோபம், உறவு முறிவு என்ற எந்தப் பிரச்சினைகளும் இதில் இருக்காது. சந்தோஷமாக இருக்கலாம். அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைக்கக்கூடிய இந்த அப்ளிகேஷனை விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். ஆரம்ப சேவைக்கு ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் நட்பு தொடரவேண்டும் என்றால் மேலும் கட்டணங்களைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply