கறிவேப்பிலை தோசை

Loading...

கறிவேப்பிலை தோசைபுழுங்கல் அரிசி – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
கறிவேப்பிலை – 20 கொத்து
மிளகாய் வற்றல் – 8
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, மிளகாய் வற்றல், சீரகம், உப்பு கறிவேப்பிலை போட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் சுற்றிலும் ஊற்றி பரப்பி விடவும்.

மேலே எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.

பூண்டு சட்னி மற்றும் பூண்டு பொடியுடன் சூடாக சாப்பிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply