கர்ப்பிணி பெண்கள் காபி குடிப்பது நல்லதா?

Loading...

கர்ப்பிணி பெண்கள் காபி குடிப்பது நல்லதாகர்ப்பிணி பெண்கள் அதிகளவில் ’காபி’ குடிப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பிணி பெண்கள் எந்த உணவை உட்கொண்டாலும் அது நஞ்சுக்கொடி என்பது மூலம் கருவை சென்றடையும்.

நஞ்சுக்கொடி என்பது குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் உணவுகளை வழங்கும்.

மேலும், உணவில் உள்ள நச்சுமிக்க பொருட்கள் கருவை அடைய விடாமல் பாதுகாக்கும்.

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிக்கலாம் என்றாலும், கர்ப்ப காலத்தில் காபி குடிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது.

கர்ப்பிணிகள் காபியைக் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் இரத்தத்தில் கலந்துவிடும்.

மேலும், கர்ப்பிணிப் பெண் ஒரு நாளைக்கு 200 மி.கி-க்கு அதிகமாக காபி குடித்து வந்தால், ’கருச்சிதைவு’ ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

எனவே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க நினைத்தால், கர்ப்பிணி பெண்கள் காபி குடிப்பதை 10 மாதத்திற்கு நிறுத்தி விடுவது நல்லது.

காபியுடன் ஒப்பிடுகையில் டீ குடிப்பது சிறந்தது. காபியை விட டீயில் காப்ஃபைன் அளவு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply