கருத்தரித்த பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

Loading...

கருத்தரித்த பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்…

நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம். மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.

மார்பகங்கள் மட்டுமின்றி, மார்பக முலைகளும் கூட பிரசவ காலத்தில் பெரியதாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்புகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.

மூன்றாவது மூன்றுகால சுழற்சியில் சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் பால் வடிதல் ஏற்படும். இதுவும் சாதாரணம் தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மார்பகங்கள் பெரிதானால், அதற்கேற்ற உள்ளாடை மாற்றி அணியுங்கள். இல்லையேல் மூச்சுவிட சிரமமாகவும், பால் சுரப்பதை தடுக்கும் வகையிலும் அமைந்துவிடும்.

Loading...
Rates : 0
VTST BN