கண்புரை நோய் எப்போது ஏற்படுகிறது? காரணங்கள் என்ன?

Loading...

கண்புரை நோய் எப்போது ஏற்படுகிறது  காரணங்கள் என்னகண் புரை நோய் எனப்படுவது, கண்களில் உள்ள திரை அல்லது லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழப்பதால் கண்பார்வை குறைவதேயாகும்.
இந்த நோய் பெரும்பாலும் முதுமையின் துவக்கத்தில் இருந்து ஏற்படலாம்.

காரணங்கள் என்ன?

கண் புரை நோய் முதுமையில் ஏற்படும் என்றாலும், மேலும் சில கண் புரை தொடர்பான நோய்கள் இருப்பதாக மருத்துவம் கூறுகிறது.

அதில், இரண்டாம் நிலை கண் புரை நோய் என்பது, நமது உடலில் ஏற்படும் வேறுபல நோய்கள் காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டு கண் புரை நோய் ஏற்படலாம்.

அடுத்த வகை, சில குழந்தைகள் பிறக்கும் போதே அவர்களின் லென்ஸ் பாதிக்கப்பட்டு அதனால் பார்வை குறைபாடுடன் பிறக்கலாம்.

ஆனால் இந்த வகை கண் புரையை, அந்த லென்ஸ் நீக்குவதன் மூலம் குணப்படுத்த முடியும். 4வது வகை, கதிர்வீச்சு காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டு, அதனால் கண் புரை நோய் ஏற்படலாம்.

மேலும், நீரிழிவு நோய் காரணமாகவும், மது மற்றும் புகைப்பிடித்தல் காரணமாகவும், சுற்றுச்சூழல் காரணமாக அதிகரிக்கும் வெட்பத்தினாலும் கண் புரை நோய் ஏற்படலாம்.

கண் புரை நோய் அறிகுறிகள்

கண்பார்வை மங்குதல், வண்ணங்கள் மங்கலாக தெரிதல், இரவு கண்பார்வை இழத்தல், அதிக ஒளிவட்டத்தால் கண்கள் கூசுதல், தெளிவற்ற பார்வை அல்லது பிம்பங்கள் பல எண்ணிக்கையில் தெரிதல்.

சிகிச்சை

கண் புரை நோயின் துவக்க நிலை என்றால் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் கண்ணாடி அணிந்தாலே போதுமானது.

நாள்பட்டது எனில் அறுவை சிகிச்சை செய்வதே நல்லது. இதனால் பாதிக்கப்பட்ட லென்ஸ் அகற்றப்பட்டு கண்பார்வையை மீட்டெடுக்கலாம்.

இப்போது பல நவீன கண் புரை அறுவை சிகிச்சை முறைகள் மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் போகோயெமல்சிபிகேஷன் (Phacoemulsification or phaco) எனும் முறை மூலம், முழுமையாக கண் புரையை நீக்கி விடலாம்.

இந்த முறையில், தையல் போடுவதில்லை மேலும் வெறும் ஐந்து நிமிடங்களில் அறுவை சிகிச்சை நிறைவு பெறும். இதுபோன்று, தையல் இல்லாத முறைகளும் கையாளப்படுகின்றன. இதை, “மைக்ரோ இன்சிஷன் காட்டராக்ட் சிகிச்சை ‘(MICS) என அழைக்கின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலம் வரையில் சொட்டு மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply