கணவாய்ப் பொரியல்

Loading...

கணவாய்ப் பொரியல்தேவையான பொருட்கள்:
unti442tled
கணவாய் சுத்தம் செய்யதப் பட்டது- 1பக்கெட் (அல்லது 10 கணவாய்)
கீரை-15- 20 இலை
இஞ்சி- அரைத்தது 2 மேசைகரண்டி
உள்ளி- அரைத்தது 2 மேசைகரண்டி
சிவப்பு வெங்காயம்-1
கருவேப்பிலை- 15
தக்காளிப் பழம்- 1
பழப்புளி- 1 மேசைகரண்டி
ஒலிவ் எண்ணெய்- 2 மேசைகரண்டி

கொத்தமல்லி இலை- தேவையான அளவு
சின்னச் சீரகம்- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு
மிளகாய்த் தூள்- தேவையான அளவு
மஞ்சள் தூள்- தேவையான அளவு
கரும்மசாலா தூள்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு
சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine)- 150 ml
பால் (தேங்காய் பால்- கொழுப்பு குறைந்தவர்களுக்கு, ஆடை நீக்கப் பட்ட பசுப் பால்- கொழுப்பு கூடியவர்களுக்கு)

செய்முறை:

வெங்காயம், தக்களிப்பழம், கீரை, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
உள்ளி, இஞ்சி இவற்றை பசையாக அரைத்து எடுக்கவும்.

ஏற்கனவே சுத்தம் செய்யப் பட்ட கணவாயை நடுத்தர துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரும்மசாலத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, உள்ளி (அரைத்தது), சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine) இவற்றை சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

சிவப்பு வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி இன்னொரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு பொரிக்கவும்.
வெங்காயம் பொரிந்து வரும் போது, கடுகு, சீரகம், கருவேப்பிலை, தக்காளிப் பழம் இவற்றையும் சேர்க்கவும்.

பழப்புளியை (அரைக் கோப்பை இளஞ்சூட்டு நீரில் கரைத்து) பொரிந்து வரும் கலவையுடன் கலக்கவும், அதனுடனையே பசுப்பால் அல்லது தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும். (பாலையும், புளியயும் சேர்த்தால் திரைஞ்சது போல் வரும், ஆனால் சில நிமிடங்களில் கலவையில் திரைவுத்தன்மை போய்விடும்.)

இப்போது ஊறவைத்து இருந்த கணவாய் கலவையை அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

15-20 நிமிடங்களில் கணவாய் அவிந்து விடும். ஒன்று எடுத்து ருசி பாருங்கள், உங்களுக்கு ஏற்ற நிலையில் அவியவில்லை என்றால், தொடர்ந்து 5-10 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.

சட்டியில் உள்ள நீர்த் தன்மை வற்றிய பின்பு, சிறிது நேரம் அதில் உள்ள எண்ணெயில் பொரிய விடுங்கள். பொரிந்து வரும் போது சிறிதாக வெட்டி வைத்த கீரையையும், கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

பின் குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கணவாய் சாபிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம். வேலைக்கு வில்லங்கம் வராமல் இருக்கத் தான் இந்த குறிப்பு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply