ஓட்ஸ் – கோதுமை ரவை ஊத்தப்பம்

Loading...

ஓட்ஸ் - கோதுமை ரவை ஊத்தப்பம்தேவையான பொருட்கள் :

கோதுமை ரொட்டி – 4 பெரிய துண்டுகள்
ஓட்ஸ் – 1 கப், வறுத்து பொடித்தது
அரிசி மாவு – 1/3 கப்
கோதுமை ரவை – 1/4 கப்
சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
உப்பு தயிர் – 1/2 கப் (தயிர்) அல்லது 1 கப் மோர்
தண்ணீர் – தேவையான அளவு
கேரட் – 1,
குடைமிளகாய் – 1,
வெங்காயம் – 1,
இஞ்சி – 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :

• கேரட்டை துருவிக்கொள்ளவும்.

• குடைமிளகாய், ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கோதுமை பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு தூள் செய்து கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை ரொட்டி தூள், ஓட்ஸ் பவுடர், அரிசி மாவு, ரவை, உப்பு, சீரகம் தயிர் மற்றும் சமையல் சோடா சேர்த்து கலந்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

• மற்றொரு கிண்ணத்தில் நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், குடை மிளகாய், கொத்தமல்லி இலைகள் கலந்து வைக்கவும்.

• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவை ஊத்தப்பம் போல சற்று தடியாக ஊற்றி ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.

• இப்போது ஊத்தப்பம் மேலே கலந்து வைத்துள்ள வெங்காய கேரட் கலவையை பரவலாக தூவவும். அடுப்பை இப்போது மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

• ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் மெதுவாக திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

• இதன் மேலே இட்லி பொடியை தூவி சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply