ஓட்ஸ் – கேரட் கட்லெட்

Loading...

ஓட்ஸ் – கேரட் கட்லெட்தேவையான பொருட்கள் :

ஒட்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1
உருளைக்கிழங்கு – 1
பச்சை பட்டாணி – அரை கப்
கேரட் – 3
குடமிளகாய் – 1
பிரவுன் பிரெட் துண்டுகள் – 2
தனியா தூள் – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• குடைமிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

• பிரெட்டையும் பொடி செய்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.

• காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து அதனுடன் பிரெட் தூள், தனியா தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு புறமும் புரட்டி, உருண்டைகளாக்கி விருப்பப்பட்ட வடிவத்தில் தட்டி வைக்கவும்.

• தட்டி வைத்தவைகளை தோவை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

• சத்தான சுவையான ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply