ஐஸ் கட்டிகளை தானாகவே உருக்கும் வீதி

Loading...

ஐஸ் கட்டிகளை தானாகவே உருக்கும் வீதிகுளிர் பிரதேசங்களில் உள்ள வீதிகளில் படியும் ஐஸ் கட்டிகளினால் அதிகளவு வீதி விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.
இதற்கு ஒரு தீர்வாக தானாகவே ஐஸ் கட்டிகளை உருகச் செய்யும் வீதிகளை அமைப்பதற்குரிய தொழில்நுட்பம் ஒன்றினை துருக்கியிலுள்ள Koç பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதற்காக விசேட பதார்த்தம் (Material) ஒன்றினை Styrene-Butadiene-Styrene எனும் பொலிமர் மற்றும் தார் என்பவற்றின் கலவையாக தயாரித்துள்ளனர்.

இக் கலவை ஐஸ் கட்டிகளை கரைக்கும் உப்பு தன்மையான பதார்த்தம் ஒன்றினை வெளிவிடுவதாகவும், வாகனங்கள் செல்லும்போது நிலத்தின் கீழாக அமுக்கம் ஏற்படுவதனால் இப் பதார்த்தம் பரந்து வீதியின் மேற்பரப்பிலுள்ள ஐஸ் கட்டிகளை உருக வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்புதிய பதார்த்தம் பல வருடங்களுக்கு பழுதுபடாமல் இருப்பதனால் குறுகிய காலத்தில் மீண்டும் மீண்டும் வீதிகளை செப்பனிடவேண்டிய அவசியம் இல்லை என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply