ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! | Tamil Serial Today Org

ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Loading...

ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!கோடை காலங்களில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள் விரைவில் உருகிவிடும்.
இதனால் அவற்றினை சுவைப்பவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவர்.

இதனை தவிர்ப்பதற்காக விரைவில் உருகாத ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாந்திலுள்ள Edinburgh பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

இவ்வாறு ஐஸ்கிரீம் விரைவில் உருகுவதினை தவிர்ப்பதற்கு BslA எனும் புரதத்தினை சேர்க்க முடியும் என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இவ் வகை ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு வருவதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN