ஐசியூவில் குட்டி பாப்பாவா? தாயின் வேதனைக்கு ஆறுதல் தருகிறது கூகுள் கிளாஸ்

Loading...

ஐசியூவில் குட்டி பாப்பாவா  தாயின் வேதனைக்கு ஆறுதல் தருகிறது கூகுள் கிளாஸ்கூகுள் கிளாஸ் தாய்மார்களின் வேதனைக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகின்றன கூகுள் கிளாஸ்
இந்நிலையில், இந்த கூகுள் கிளாசை பயன்டுத்தி குழந்தையை பெற்ற தாய் ஒருவர், தனது குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் குழந்தையின் அசைவுகளை பார்க்க முடியும்.
வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்று, படுக்கையில் இருந்தவாறே தாய் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தையை கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்க பரிசோதனை முயற்சி செய்ய உள்ளது.
இந்த பரிசோதனை முயற்சி அடுத்த வாரம் பிரிகாம் பெண்கள் மருத்துவமனையில் நடக்க உள்ளது.
பிரிகாம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபனி ஷைன் இந்த சோதனை முயற்சிக்கு பரிந்துரை செய்துள்ளார். இவரது குழந்தை 101 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறது.
அதன்படி கூகுள் கிளாஸ் அணிந்த நபர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைவார். அங்கு அவர் பார்க்கும் காட்சிகளை படுக்கையிலிருக்கும் தாய் தன் கையில் வைத்திருக்கும் டேப்லட் ஃபோனின் உதவியுடன் பார்த்து மகிழ்வார்.
இதன் மூலம் எண்ணற்ற தாய்மார்களின் வேதனையை தீர்க்கவிருக்கிறது கூகுள் கிளாஸ்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply