எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Loading...

எண்ணெய் கத்தரிக்காய் குழம்புகத்தரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
புளி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி + 5 தேக்கரண்டி
வடகம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
தனி மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொப்பரை (அ) தேங்காய் – அரை மூடி
வறுத்து பொடிக்க :
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5

சின்ன‌ வெங்காயம், பெரிய‌ வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக‌ நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும். கத்தரிக்காய் சிறிதாக‌ இருந்தால் இரண்டாக‌ பிளந்து வைக்கவும். பெரிதாக‌ இருந்தால் நான்காக‌ பிளந்து வைக்கவும்.

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், காய்ந்த‌ மிளகாய் சேர்த்து வறுத்து அரைத்து பொடி செய்து வைக்கவும்.

குழம்பு சட்டியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு சிறிது நேரம் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர் அதே சட்டியில் 5 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கி வைத்த‌ சின்ன‌ மற்றும் பெரிய‌ வெங்காயத்தை சேர்த்து நன்கு வத‌க்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு வதக்கிய‌ கத்தரிக்காய், தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு சேர்த்து தூள் வாசனை போக‌ வதக்கவும்.

வதக்கியவற்றுடன் புளி கரைசலை சேர்த்து மூடி போட்டு அதிகமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க‌ விடவும்.

குழம்பு சுண்டி தூள் வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள‌ பொடியை சேர்க்கவும்.

பின்னர் கொப்பரை தேங்காயை அரைத்து சேர்க்கவும். கொப்பரை இல்லையெனில் அரை மூடி தேங்காயை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து சேர்க்கவும்.

தேங்காய் சேர்த்த‌ பின்னர் நீண்ட‌ நேரம் கொதிக்க‌ வைக்க‌ தேவையில்லை. உடனே 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

சுவையான‌ எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply