எடையை குறைக்கலாம்…Slim Body

Loading...

எடையை குறைக்கலாம்…Slim Bodyஎடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான பெல்ட் அணிந்து, உடலை வருத்தி கொள்ள வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளால், விரைவில் உடல் எடையை, கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
சாப்பிடும் போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். கோபம், கவலை இருக்கும் சமயங்களில், மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும் அல்லது கோபம் தணிந்த பின் உணவு உட்கொள்ளலாம். கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம். கைக்குத்தல் அரிசியில், உடலை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன.
வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. நீர் சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம். மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காலையில், வெறும் வயிற்றில், சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும். முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை, போதியளவில் சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். அதிகமாக மோர் குடிப்பது நல்லது. தயிர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பால் அளவாக அருந்த வேண்டும். பழச்சாறு, காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளை, அவ்வப்போது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கொள்ளு சூப், கொள்ளு துவையல், வறுத்த கொள்ளு, வேக வைத்த கொள்ளு போன்றவற்றை, வாரம் மூன்று முறை எடுத்து கொள்ளலாம். கொள்ளு சாப்பிட்டால், உடலில் தேவையற்ற கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும். யோகா, நீராவிக் குளியல் ஆகியவை செய்வது உடல் எடை குறைக்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply