உளுந்து கார புட்டு

Loading...

உளுந்து கார புட்டுதேவையான பொருட்கள் :
உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

• உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

• அரைத்த மாவை இட்லி சட்டியில் இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• வேக வைத்த இட்லியை ஆறவைத்து உதிர்த்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறவும்.

• அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவல் போட்டு உதிரியாக வரும் வரை வைத்து அடுப்பில் வைத்து இறக்கவும்.

• சுவையான சத்தான உளுந்து கார புட்டு ரெடி.

Loading...
Rates : 0
VTST BN