உலகின் முதலாவது இணையத்தளத்திற்கு வயது 25

Loading...

உலகின் முதலாவது இணையத்தளத்திற்கு வயது 25இன்று உலகே சுருங்கி ஒரு கிராமம் போல் தோற்றமளிப்பதற்கு இணையத்தளம் முக்கிய காரணமாக விளங்குகின்றது.
இவ்வாறான இணையத்தளத்தினை முதன் முதலில் ரிம் பேர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவர் அறிமுகம் செய்திருந்தார்.

அதாவது சுவிட்ஸர்லாந்தில் உள்ள CERN எனும் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த இவர் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதன் முதலாக World Wide Web (WWW) எனும் நெறிமுறையை அறிமுகம் செய்து தற்போதைய இணையத்தளங்களுக்கு அடித்தளமிட்டிருந்தார்.

இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உலகெங்கிலும் சுமார் 4 பில்லியன் வரையான இணையத்தளங்கள் அல்லது இணைய பக்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply