உணவிற்கு பின்னே பழங்கள் சாப்பிடுவது நல்லதா?

Loading...

உணவிற்கு பின்னே பழங்கள் சாப்பிடுவது நல்லதாதினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் வராது, மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருப்பினும் எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.

* காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது.

ப்ரெட், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. அதேபோல் உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறிவிடும்.

* பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது, இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட, அப்படி சாப்பிடும் போது நார்ச்சத்தும், பழத்தில் உள்ள சத்துக்களும் அப்படியே முழுவதுமாக கிடைக்கும்.

* அதே போன்று பழங்களை நறுக்கி சாப்பிடுவதற்கு பதிலாக கடித்து சாப்பிடலாம், நறுக்கி சாப்பிடும் போது வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் குறைந்து விடுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply