உடல் துர்நாற்றமா? இதெல்லாம் சாப்பிடாதீங்க!

Loading...

உடல் துர்நாற்றமா  இதெல்லாம் சாப்பிடாதீங்க!ஒரு சிலரின் அருகில் போகவே முடியாது கற்றாழை வாசம் அடிக்கும். ஒரு சிலரின் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றம் அவர்களுக்கே அருவெறுப்பு ஊட்டக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணம் நம் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுவதுதான். நாம் உண்ணும் உணவும் கூட உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே அவற்றை தவிர்ப்பதன் மூலம் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
ரெட் மீட்
மாட்டுக்கறி, மட்டன் போன்ற ரெட் மீட் சாப்பிடுவதன் மூலம் ஜீரணம் மெதுவாக நடைபெறும். உடலில் இருந்து வியர்வை வழியாக கழிவுகள் வெளியேறுவதனால் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜங் ஃபுட்
பர்க்கர், பீட்ஸா, ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுப்பொருட்கள் சாப்பிடுவதன் மூலம் உணவு ஜீரணமாவது சிரமமாகிறது. அதேபோல் பொரித்த உணவுகளில் அதிக எண்ணெய் சேர்க்கப்படுவதனால் அவை குடலுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல் அதிக அளவு காபி குடிப்பதும் உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துமாம்.
பால் பொருட்கள்
உடல் துர்நாற்றம் உள்ளவர்கள் டின்னில் அடைக்கப்பட்ட பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இவை சுவாசத்தை கூட கெடுத்து விடுமாம். இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்கச் செல்பவர்கள் கூட நன்றாக பல் துலக்கிவிட்டு உறங்கச் சென்றால் சுவாசம் புத்துணர்ச்சியோடு இருக்கும் உங்களின் பார்ட்னரின் முகச்சுழிப்பில் இருந்து தப்புவீர்கள்.
வெங்காயம், பூண்டு
பச்சை வெங்காயம் சாப்பிடுவதனால் சில மணிநேரங்களில் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதேபோல் வெள்ளைப்பூண்டு சேர்த்துக்கொண்டாலும் சுவாசம் மோசமானதாகி விடும். எனவே கோடை காலத்தில் அதிக அளவில் பச்சை வெங்காயம் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply