உங்க லேப்டாப்பில் தண்ணீர் புகுந்து விட்டதா? ஈஸியா சரி செய்யலாம்

Loading...

உங்க லேப்டாப்பில் தண்ணீர் புகுந்து விட்டதா  ஈஸியா சரி செய்யலாம்நாம் தினசரி உணவிற்காக பயன்படுத்தும் அரிசி மூலம் தண்ணீரால் பாதிக்கப்பட்ட லேப்டாப்பை எளிதாக சரி செய்யலாம்.
நமக்கு பல வழிகளில் பயன்படும் லேப்டாப்பை நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் ஒரு சில சமயங்களில் பாதிப்புக்குள்ளாவது வழக்கமானது.
அந்த வகையில் தண்ணீரால் பாதிக்கப்பட்ட லேப்டாப்பை இரு வழிகளில் சரி செய்ய முயற்சி செய்யலாம். ஒன்று லேப்டாப்பின் பாகங்களை கழற்றி உலர வைப்பது. இது பலருக்கும் சாத்தியமில்லாமல் தோன்றலாம்.
இரண்டாவது அரிசி மூலம் தண்ணீரை உலர வைப்பது. இதைப் பற்றி பார்க்கலாம்.
1) தண்ணீர் லேப்டாப்பில் புகுந்து விட்டது என்பதை அறிந்த உடனே லேப்டாப்பை அணைந்து விடவும்.
670px-Save-Your-Laptop-After-Water-Damage-with-Rice-Step-1

2) உங்கள் லேப்டாப் அடாப்டரில் இணைக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதி உலர்ந்துள்ளதாக என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதை நீக்கி விடவும்.
laptop_water_002

3) லேப்டாப்புடன் இணைக்கப்பட்ட பேட்டரியை உடனே கழற்றிவிடவும். ஈரத்தன்மை பேட்டரியை பாதிக்க கூடும்.
laptop_water_003

4) லேப்டாப்பின் மேல் உள்ள தண்ணீரை முழுதும் வடித்து விட வேண்டும். இதன் மூலம் தண்ணீர் உட்புகுவதை தடுக்கலாம்.
laptop_water_004

5) பொத்தான்களுக்குஇடையே உள்ள தண்ணீரை துணி அல்லது இடைவெளிகளில் நுழையக் கூடிய பொருள் கொண்டு துடைக்கவும்.
laptop_water_005

6) வீட்டில் பிளாஸ்டிக் பை அல்லது பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் லேப்டாப்பை புதைத்து வைத்து விட வேண்டும். இது லேப்டாப்பில் உள்ள ஈரப்பதத்தை முழுவதும் நீக்கிவிடும்.
laptop_water_006

7) 48 மணி நேரத்திற்கு பிறகு புதைத்து வைத்த லேப்டாப்பை வெளியே எடுக்க வேண்டும். தற்போது ஈரத்தன்மை இல்லாமல் இருக்கும்.
laptop_water_007

8) தற்போது பேட்டரி போடாமல் பவர் கார்டை பயன்படுத்தி லேப்டாப்பை உபயோகித்து பார்க்கவும். லேப்டாப் வேலை செய்ய ஆரம்பித்தால் தாமதிக்காமல் பேக்- அப் எடுத்து விடுங்கள். இப்போது பேட்டரியை பயன்படுத்தி உங்கள் லேப்டாப்பை இயக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply