உங்க கணனியில் வைரஸ் இருக்கா? கவலையை விடுங்க

Loading...

உங்க கணனியில் வைரஸ் இருக்கா  கவலையை விடுங்கஉங்கள் கணனியில் இருக்கும் வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஒரு முறை கணனிக்கு வந்து விட்டால் உங்கள் கணனி மட்டுமல்லாது நீங்கள் வைத்திருக்கும் தகவல்களையும் போகும் போது சேர்த்து கொண்டு போய்விடும். அதனால் வைரஸை உங்க கணனியில் நுழைய விடாமல் தடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதற்கு என்ன செய்ய வேண்டும். ஆன்டிவைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வைரஸ்களை முடக்கும் அளவுக்கு உங்க ஆன்டிவைரஸ் செயல்பட வேண்டும். அதனால் முடிந்தவரை தரமான ஆன்டிவைரஸை பயன்படுத்துங்கள். அப்டேட் அப்டேட் செய்வதின் மூலம் வைரஸ் நுழைவதை தடுக்க முடியும். அதனால் சீரான இடைவெளியில் வைரஸ் டேட்டாஸை அப்டேட் செய்யுங்கள். பூட் செட்டிங்ஸ் கணனியின் சி-மோஸ் செட்டிங்ஸில் முதலில் சி டிரைவ் பூட் செய்யாமல் ஏ டிரைவை பூட் செய்யும் படி மாற்றியமைக்க வேண்டும். பேக்கப் வைரஸினால் ஃபைல்களை இழந்து விடாமல் இருக்க முடிந்தவரை அவ்வப்போது உங்க கணனியை பேக்கப் செய்யுங்கள். இது உங்க கணனியில் இருக்கும் தேவையில்லாத ஃபைல்களை வெளியேற்றவும் உதவும். வெப் பிரவுஸர் இன்டெர்நெட் பயன்படுத்தும் போது அது தானாக இதர ப்ரோகிராம்களை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். இதன் மூலம் வைரஸ் உங்க கணனியினுள் நுழைவதை தடுக்க முடியும். வைரஸ் பாதுகாப்பற்ற ஃபைல்களை இன்ஸ்டால் செய்வது மற்றும் வைரஸ் இருக்கும் டிஸ்க்களை பயன்படுத்துவதன் மூலம் தான் அதிகப்படியான வைரஸ் கணனியில் நுழைகிறது. கான்ஃபிகர் உங்க வெப் பிரவுஸரில் ஜாவா, ஆக்டிவ் எக்ஸ் அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். இதன் மூலமும் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply