ஈஸி மாங்காய் ஊறுகாய்

Loading...

ஈஸி மாங்காய் ஊறுகாய்மாங்காய் – 2
தனி மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு

வெறும் வாணலியில் வெந்தயம், கடுகு சேர்த்து நன்கு வறுத்து பொடியாக‌ அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் பொடியாக‌ நறுக்கிய மாங்காய் சேர்த்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும். இடையிடையே சிறிது சூடான நல்லெண்ணெய் சேர்க்கவும்.

மாங்காய் 10 நிமிடம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெந்தயம் கடுகு தூளை சேர்க்கவும்.

மேலும் எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும். சுவையான‌ மாங்காய் ஊறுகாய் தயார். இது ஒரு வாரம் வரை கெடாது. நீண்ட‌ நாள் வைக்க‌ விரும்புவோர் வினிகர் சேர்த்து கலந்து வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply