ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

Loading...

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்வைட்டமின், கரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம். பிளீச்சிங் செய்தது போல் இருக்க வேண்டும் என்பவர்கள், பாலுக்குப் பதில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

முகத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால், சருமம் அன்று பூத்த மலர் போல் ப்ரெஷ்ஷாக இருக்கும். சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். இதே போல், ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா, சாமந்தி இதழ்களுடன் மோர் சேர்த்து அரைத்து ஃப்ளவர் ஃபேஷியல் செய்யலாம்.

ஆனால் எக்காரணத்தை கொண்டும் தலையில் வைத்த பூவை கொண்டு பேஷியல் செய்ய கூடாது. மசாஜ் செய்யும்போது, வட்டமாகவும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்ய வேண்டும். இதனால், சருமம் தளர்வடையாமல் காக்கலாம்.

எந்த அழகு விஷயத்தையும், முகத்துக்கு மட்டும் செய்யாமல் கழுத்துக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். அப்போதுதான், ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறத்திலும் தெரியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply