இளம் பெண்களை கவரும் கலர் மெஹந்தி

Loading...

இளம் பெண்களை கவரும் கலர் மெஹந்திமருதாணி என்றால் சிவந்தால் தானே அழகு? ஆனால் அழகுத்துறையில் லேட்டஸ்ட் என்ன தெரியுமா? கலர், கலர் மெஹந்தி. இந்த தலை முறைப் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வரும் கலர் மெஹந்தி பற்றி பார்க்கலாம். எல்லாவற்றிலும் புதுமையை விரும்புறவங்க இந்தத் தலைமுறைப் பெண்கள்.

மெஹந்தி போட்டுக்கிறதை விரும்பற அவங்க, அதுலேயும் ஏதாவது புதுமை வேணும்னு ஆசைப்படறாங்க. அவங்களுக்காகவே வந்திருக்கு கலர் மெஹந்தி கோன்கள். பொதுவா நம்ம பாராம்பரிய மருதாணி மெரூன் கலரிலும், கருப்பு மெஹந்தியும் தான் அதிகம் உபயோகப்படுத்தியிருக்கிறோம். இப்ப எல்லாவற்றிலும் மேட்சிங் விரும்பற பெண்கள் மெஹந்திலையும் அதையே விரும்பறாங்க.

அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற என்றே பச்சை, நீலம், சிகப்பு, கருப்பு, பிங்க், சில்வர், கோல்டு, என கலர் கலரான மெஹந்தி கோன்கள் வந்திருக்கின்றன. அவுட் லைன் மட்டும் கருப்பு அல்லது மெரூன் கலரில் போட வேண்டும். அதன் பிறகு உள் பகுதியில் டிசைன்களை விருப்பமான கலரில் வரையலாம். பளபளப்பு வேணும்னா அதுக்குத் தனியா கிளிட்டரிங் கலர் இருக்கு.

கலர் மெஹந்தி போட்டதும், அதுக்கு மேல கிளியர் நெயில் பாலீஷ் கோட்டிங் கொடுக்க வேண்டும். இதனால கலர் அழியாது. பார்ட்டி, கல்யாண ரிஷப்ஷனில் எல்லாம் இப்ப கலர் மெஹந்தி தான் ஹாட். இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், புடவையில் உள்ள டிசைனை அப்படியே, அதே கலரில் வரையலாம்.

இன்றைய இளம் பெண்கள் உள்ளங்கையில் போடுவதை போலவே முதுகில் ஜாக்கெட்டுக்கு மேலே தெரியும் பகுதி, இடுப்பு, கால்களில் என விருப்பமான இடங்களில் போட்டுக் கொள்கிறார்கள். சாதாரண மெஹந்தி மாதிரி இது நாள் கணக்குல இருக்காது. ஒரு நாள் தான் இருக்கும். கிளென்சிங் மில்க்கோ, தேங்காய் எண்ணெயோ வச்சுத் துடைச்சா சுத்தமாயிடும். இந்த கலர் மெஹந்தி கோன்களை முகத்துக்கு உபயோகிப்பது அத்தனை நல்லதல்ல.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply