இலந்தை பழத்தின் மருத்துவ பலன்கள்

Loading...

இலந்தை பழத்தின் மருத்துவ பலன்கள்வைட்டமின் சத்துக்கள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது.
இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச் சத்து, புரதம் மற்றும் தாது உப்புக்கள் அதிகமுள்ளது.

கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு பலவீனமானவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வரலாம், எலும்புகள் வலுப்பெறுவதுடன் பற்களும் உறுதியாகும்.

பித்தத்தை சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

இப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் அதிகம் சாப்பிடலாம்.

இப்பழத்தை போன்றே இதன் இலையில் சத்துக்கள் உள்ளன, வெட்டுக்காயம் ஏற்பட்டால் இதன் இலையை மை போல அரைத்து தடவினால் விரைவில் சரியாகிவிடும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply